றொழிலினால் வரும் வருத்தத்தோடு (பொருந்துவதன்றி), பயன் தலைப்படான் - பயனை யுமடையமாட்டான். (பொருந்துதலன்றியென்பது இசையெச்சம்) படான் என்பதில் படாமையுமுடையன் என உடைமை விரித்து அதனோடு ஒடுவை முடிப்பினு மமையும். வினையினுழப்பு என்பதை 'வினையிலுழப்பு' என்று பாடமோதித் தொழிலற்ற முயற்சி எனப் பொருள்கொண்டு, தாற்பரியமாகப் 'பயனற்ற முயற்சி' என்பாருமுளர். அம்மரபில்லோன் - அக் கோடன்மரபில்லாதவன். செவ்விதினுரைத்தல் - நன்கு கற்பித்தல். | சிறப்புப்பாயிரம் | அவ்வி ரண்டெல்லைக்குளிருந்து தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது வழக்கையுஞ் செய்யுளையும் அடியாகக் கொள்ளுதலினாலே செந்தமிழியல்பாகப் பொருந்திய செந்தமிழ்நாடென்க. இருந்து சொல்லும் என்றாதனாலே, செந்தமிழ் மொழியினைக் கூறுவாரையே நல்லாசிரிய ரென்றாரென்றாகும். நல்லாசிரியரது வழக்கையுஞ் செய்யுளையும் அடியாகக் கொள்ளுகையினாலே செந்தமிழ் இயல்பாகப் பொருந்திய வென்றது, செந்தமிழாசிரியரது வழக்கையுஞ் செய்யுணூல்களையும் அடியாகக்கொண்டே. செந்தமிழ் செந்தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றதென்றபடி. எனவே தொல்காப்பியரும் செந்தமிழ்நாட்டு வழக்கோடு முன்னை யிலக்கணங்களையுமாராய்ந்து இந்நூல் செய்தா ரென்பது கருத்தாம். நல்லாசிரியர் வழக்கை யடியாகக் கொள்ளுகையினாலே செந்தமி ழியல்பாகப் பொருந்திய, செந்தமிழ்நாட்டு வழக்கெனவே, நல்லாசிரியரது மரபு தவறாது வந்த செந்தமிழ் வழக்கு என்பது போதரும். செய்யுளை விதவாது செந்தமிழ் வழக்கெனப் பொதுவாகக் கூறினமையின் இரண்டுங் கொள்ளப்படும். | ஏழு நிலமாவன ;- பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. இவற்றைச் செய்யுளியலில் 79 - ம் சூத்திரம் நோக்கியுணர்க. | இவற்றுட் பாட்டென்றது : செய்யுளை. உரையென்றது : உரைநடையை. அது நான்குவகை. 173 - ம் சூத்திரம் [தொல் - செய் ] பார்க்க. நூல் என்றது : இலக்கணநூலை. இது பெரும்பாலும் சூத்திர யாப்பாற் செய்யப்படுவது. வாய்மொழி : உண்மைமொழி, என்றது நிறைமொழி மாந்தராற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்துக் கூறப்படும் தொடர்மொழிகளை. இவையே மந்திரம் எனப்படும். பிசி என்றது நொடியான சொற்றொடர்களை. இதனைச் செய்யுளியல் 176 - ம் சூத்திரத்துட் பார்க்க. அங்கதம் : வசைச் செய்யுள். முதுசொல் : பழமொழி. செய்யுளியல் 177 - ம் சூத்திரம் நோக்கி யுணர்க. இவை உரையாசிரியர் கருத்து. | முற்கு - கர்ச்சனை ; வீரர் போர்க்கழைக்கும் ஒருவகையொலி. இதனை அறைகூவலென்ப. வீளை : சீழ்க்கை. இது வேட்டுவசாதிக்குள் வழங்கியது. இலதை : இதுவுமோர் குறிப்பொலி. இன்னதென்று புலப்படவில்லை. வழக்கிறந்ததுபோலும். எனினுஞ் செருமல் போன்ற ஓரொலியா யிருக்கவேண்டுமென்று இக்கால வழக்காற் |
|
|