202உயிர்மயங்கியல்

உதாரணம் :பற்பலகொண்டார்  சிற்சிலவித்தி  என   வரும்.   அகர
ஈற்றுச்   சுட்டல்லாத   குற்றெழுத்து   ஓரெழுத்  தொரு  மொழியாகுவன
இன்மையின்   தொடரலிறுதி   யெனவே    ஈரெழுத்    தொருமொழியே
உணர்த்திற்று.  தன்முனென்னாது  தம்முனென்ற  பன்மையாற் பலசில என
நின்ற இரண்டுந் தழுவப்பட்டன.
 

தம்முன்வரினென்னாது  தாமென்றதனாற்  பலவின்முன்   பலவருதலுஞ்
சிலவின்முன்  சிலவருதலுங்  கொள்க.    லகரம்    றகர   வொற்றாமென
ஒற்றிற்குத்    திரிபு   கூறி    அகரங்கெடுதல்   கூறிற்றிலரெனின்,  அது
1வாராததனால்   வந்தது   முடித்தலென்னும்   உத்த  பெறவைத்ததென்று
உணர்க. இதனை  ஞாபகமென்பாரும்  உளர். அருத்தாபத்தியால்  தம்முன்
தாம் வரினெனவே  தம்முன் பிறவரின்  லகரம் றகரவொற்றாகாது  அகரங்
கெடுமென்று கொள்ளப்படும்.
 

உதாரணம்:பல்கடல்  சேனை  தானை  பறை  எனவும்,  பல்யானை
பல்வேள்வி எனவும்,  சில்காடு சேனை தானை  பறை எனவும்,  சில்யானை
சில்வேள்வி எனவும் வரும். உரித்தென்றது அகரஈற் றொருமைபற்றி.
 

(12)
 

215.

வல்லெழுத் தியற்கை யுறழத் தோன்றும்.
 

இது    முற்கூறிய    இரண்டற்கும்   உள்ளதோர்  முடிபு  வேற்றுமை
கூறுகின்றது.
 

இதன் பொருள்: வல்லெழுத்து   இயற்கை  -   முற்கூறிய   பலசில
வென்னும்    இரண்டற்கும்    அகர    ஈற்றுப்   பொதுவிதியிற்   கூறிய
வல்லெழுத்துமிகும்  இயல்பு, உறழத் தோன்றும் - மிகுதலும் மிகாமையுமாய்
உறழ்ந்துவரத் தோன்றும் என்றவாறு.


1. வாராததனால்   வந்தது   முடித்தலாவது  -  ஒரு  பொருண்மைக்கு
வேண்டும் இலக்கணம் நிரம்ப வராததோர் சூத்திரத்தானே அங்ஙனம் வந்த
பொருண்மைக்கு  வேண்டும் முடிபு  கொள்ளச்  செய்தல்.  இங்கே  நிரம்ப
வராதது - அகரக்கேடு சொல்லாமை. லகரம்  றகரமாகத்  திரியும்  எனவே
அதில்  ஏறிநின்ற  அகரக்கேடு  ஈண்டுச் சொல்லப்படாததாயினும் அஃதும்
இவ்வுத்தியாற்  கொள்ளப்படுமென்பது  கருத்து. ஞாபகம் என்றது, ஞாபகம்
என்னும் உத்தியை.   அது  முன்  விளக்கப்பெற்றது.   அருத்தாபத்தியாற்
கொள்ளப்படுமென     முடிக்க.    உரித்தென்றது  -    சூத்திரத்திலுள்ள
உரித்தென்னுஞ் சொல்லை.