உயிர்மயங்கியல்203

உதாரணம் :பலப்பல பலபல  சிலச்சில சிலசில என  வரும். ஈண்டுந்
தம்முன்   தாம்வருதல்   கொள்க.   இயற்கையென்றதனான்   அகரங்கெட
லகரந் திரிந்துந்  திரியாதும் உறழ்ந்தும்  முடிதலுங் கொள்க. பற்பல பல்பல
சிற்சில சில்சில என  வரும். தோன்று  மென்றதனான் அகரங்கெட  லகரம்
மெல்லெழுத்தும்     ஆய்தமுமாகத்     திரந்து   முடிதலுங்    கொள்க.
பன்மீன்வேட்டத்து, பன்மலர், பஃறாலி,  பஃறாழிசை, சின்னூல், சிஃறாழிசை
என வரும். இது முன்னர்த்  தோன்றுமென்று எடுத்தோதிய சிறப்புவிதியால்
அகரங்கெட  நின்ற லகரவொற்றின்  முடிபாகலின் "தகரம் வருவழி ஆய்த"
மென்பதனான் முடியாது.
 

(13)
 

216.

வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.
 

இஃது அகர ஈற்றிற்கு அல்வழி முடிபுகூறி வன்கணத்தோடு  வேற்றுமை
தொக்குநின்ற முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் வேற்றுமைக்கண்ணும்    அதனோரற்று  -  அகர
ஈற்றுப்பெயர்  வேற்றுமைப்    பொருட்    புணர்ச்சிக்கண்ணும்  முற்கூறிய
அல்வழியோடு   ஒருதன்மைத்தாய்க்    கசதப   முதன்மொழி   வந்துழித்
தத்தம் ஒத்தவொற்று இடைமிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் :இருவிளக்   கொற்றன்   சாத்தன்  தேவன்  பூதன்  என
வரும்.     இருவிளக்    குறுமை   சிறுமை    தீமை   பெருமை  எனக்
குணவேற்றுமைக்கண்ணுங்     கொள்க.   இருவிள    வென்பது   ஓலை;
வேணாட்டகத்து  ஓரூர் ; கருவூரினகத்து ஒரு  சேரியுமென்ப.  இருவிளவிற்
கொற்றன் என விரிக்க.
 

(14)
 

217.

மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே.
 

இஃது  அகர  ஈற்று  மரப்பெயர்க்கு  எய்தியது விலக்கிப்  பிறிது விதி
வகுத்தது.
 

இதன் பொருள் :  மரப்பெயர்க்  கிளவி மெல்லெழுத்து மிகும் - அகர
ஈற்று மரப்பெயராய   சொல்   வேற்றுமைப்   பொருட்    புணர்ச்சிக்கண்
மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.