204உயிர்மயங்கியல்

உதாரணம் :அதங்கோடு விளங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
 

இது 'கசதப முதலிய' (எழு - 143) என்பதனான் முடியும்.
 

(15)
 

218.

மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை.
 

இஃது  அகர  ஈற்றுள்   ஒன்றற்கு  எய்தியது  விலக்கிப்  பிறிது  விதி
வகுத்தது.
 

இதன் பொருள் :  மகப்பெயர்க்  கிளவிக்கு இன்னே சாரியை - அகர
ஈற்று  மக    என்னும்   பெயர்ச்   சொல்லிற்கு   வேற்றுமைப்  பொருட்
புணர்ச்சிக்கண் வருஞ்சாரியை என்றவாறு.
 

உதாரணம் :மகவின்கை செவி தலை புறம் என வரும். சாரியைப்பேறு
வரையாது   கூறியவழி    நான்கு   கணத்துக்கண்ணுஞ்   செல்லுமென்பது
ஆசிரியர்க்குக்  கருத்தாகலின்  மகவின் ஞாண் நூல்  மணி  யாழ்  வட்டு
அடை என ஒட்டுக.
 

மேல் அவண் என்றதனான் இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து
வீழ்க்க.
 

(16)
 

219.

அத்தவண் வரினும் வரைநிலை யின்றே.
 

இஃது  ஈற்று  வல்லெழுத்தும்  அத்தும்   வகுத்தலின் எய்தியதன்மேற்
சிறப்பு விதி கூறுகின்றது.
 

இதன்பொருள்அவண்  -   முற்கூறிய  மகவிடத்து,   அத்துவரினும்
வரைநிலை   இன்று   -   இன்னேயன்றி   அத்துச்   சாரியையும்  ஈற்று
வல்லெழுத்தும் வந்து முடியினும் நீக்கும் நிலைமையின்று என்றவாறு.
 

உதாரணம் :மகத்துக் கை செவி தலை புறம் என வரும்.
 

அவண்  என்றதனால்  மகப்பால்யாடு   என  வல்லெழுத்துப்  பேறும்,
மகவின்கை   என   மேல்இன்சாரியை  பெற்றுழி   இயைபு  வல்லெழுத்து
வீழ்வும், விளவின்கோடு  என  உருபிற்குச்   சென்ற சாரியை  பொருட்கட்
சென்றுழி  இயைபு   வல்லெழுத்து வீழ்வுங்  கொள்க.  நிலையென்றதனால்
மகம்பால்யாடு என மெல்லெழுத்துப் பேறுங் கொள்க.
 

(17)