உயிர்மயங்கியல்205

220.

பலவற் றிறுதி யுருபிய னிலையும்.
 

இஃது  ஈற்று  வல்லெழுத்தும்   வற்றும்  வகுத்தலின்  எய்தியதன்மேற்
சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் பலவற்றிறுதி  -  பல்ல  பல  சில  உள்ள  இல்ல
என்னும் பலவற்றை யுணர்த்தும் அகர ஈற்றுச் சொற்களின் இறுதி, உருபியல்
நிலையும் - உருபியற்கண்  வற்றுப் பெற்றுப்  புணர்ந்தாற்போல  உருபினது
பொருட் புணர்ச்சிக் கண்ணும் வற்றுப்பெற்றுப் புணரும் என்றவாறு.
 

ஈற்று வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க.
 

உதாரணம் பல்லவற்றுக்கோடு   பலவற்றுக்கோடு  சிலவற்றுக்கோடு
உள்ளவற்றுக்கோடு  இல்லவற்றுக்கோடு, செதிள்  தோல்  பூ  என ஒட்டுக.
உருபு விரிந்துழி நிற்குமாறு போலன்றி  அவ்வுருபு தொக்கு 1அதன்பொருள்
நின்று  புணருங்கால்  வேறுபாடு  உடைமையின் அவ்வேறுபாடுகள் ஈண்டு
ஓதினார் இத்துணையு மென்று உணர்க.
 

(18)
 

221.

ஆகார விறுதி யகர வியற்றே.
 

இஃது ஆகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்:ஆகார இறுதி அகர இயற்று - ஆகார ஈற்றுப்பெயர்
அல்வழிக்கண்   அகர  ஈற்று  அல்வழியது  இயல்பிற்றாய்  வல்லெழுத்து
வந்துழித் தத்தம் ஒத்த ஒற்று இடைமிகும் என்றவாறு.
 

உதாரணம் :  மூங்காக்கடிது  தாராக்கடிது  சிறிது  தீது  பெரிது  என
ஒட்டுக.
 

(19)
 

222.

செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியு
மவ்விய றிரியா தென்மனார் புலவர்.

 

இஃது ஆகார ஈற்று வினைச்சொன் முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள்:செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் - செய்யா
வென்னும்   வினையெச்சமாகிய    சொல்லும்   உம்மையாற்   பெயரெச்ச
மறையாகிய சொல்லும், அவ்வியல் திரியாது 


1. அதன்   பொருள்   -   உருபின்   பொருள்.  பொருள்   என்றது
வருமொழியை வருமொழிபற்றியே பொருளுணரப்படும்.