என்மனார் புலவர் - வல்லெழுத்து மிக்கு முடியும் அவ்வியல்பிற் றிரியாதென்று சொல்லுவார் புலவர் என்றவாறு. |
உதாரணம் :உண்ணாக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், உண்ணாக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். |
(20) |
223. | உம்மை யெஞ்சிய விருபெயர்த் தொகைமொழி மெய்ம்மை யாக வகர மிகுமே. |
|
இஃது ஆகார ஈற்று அல்வழிக்கண் உம்மைத்தொகை முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள்:உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி - உம்மை தொக்குநின்ற இருபெயராகிய தொகைச்சொற்கள், மெய்ம்மையாக அகரம் மிகும் - மெய்யாக நிலை மொழியீற்று அகரம் மிக்குமுடியும் என்றவாறு. |
உதாரணம் : உவாஅப்பதினான்கு இராஅப்பகல் என வரும். மெய்ம்மையாக என்பதனான் வல்லெழுத்துக் கொடுக்க. இஃது எழுவாயும் பயனிலையுமின்றி உம்மைத்தொகையாதலின் 1மாட்டேற்றான் வல்லெழுத்துப் பெறாதாயிற்று. |
உம்மை தொக்க என்னாது எஞ்சிய என்ற வாய்பாட்டு வேற்றுமையான் அராஅப்பாம்பு எனப் பண்புத் தொகைக்கும் இராஅக்கொடிது என எழுவாய்முடிபிற்கும் இராஅக்காக்கை எனப் பெயரெச்சமறைக்கும் அகரப்பேறு கொள்க. வருமொழி வரையாது கூறினமையின் இயல்புக் கணத்துக்கண்ணும் அகரப்பேறு கொள்க. இறாஅவழு துணங்காய் என வரும். இஃது உம்மைத்தொகை. அராஅக்குட்டி என்பது பண்புத் தொகையும் வேற்றுமைத்தொகையுமாம். உவாஅப்பட்டினி என்பது வேற்றுமைத்தொகை. |
(21) |
|
1. மாட்டேறு என்றது 'ஆகார விறுதி யகர வியற்றே' என்றதை. எனவே அகரவீற்றுவிதி எழுவாய்த் தொடருக்கேயாதலின் அதனோடு மாட்டிய ஆகாரவீற்றுவிதி எழுவாய்த் தொடருக்கே யுரியது. ஆதலின் உம்மைத்தொகை அம் மாட்டேற்றான் வல்லெழுத்துப் பெறாதாயிற்றென்க. |