210உயிர்மயங்கியல்

உதாரணம் :நிலாஅத்துக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான்
என  வரும். 1நிலைமொழித்  தொழிலை   விலக்குமாதலின்  அத்துவகுப்ப
அகரம்  வீழ்ந்தது. இதற்கு  ஏழனுருபு   விரிக்க.   நிலாஅக்கதிர்  என்பது
'வேற்றுமைக்கண்ணும்'    (எழு   -   225)      என்பதனான்     ஈற்று
வல்லெழுத்துப்பெற்றது.  நிலாஅமுற்றமென்பது 'ஒட்டுதற்கொழுகிய  வழக்கு'
அன்மையின்   அத்துப்   பெறாதாயிற்று.  ஈண்டு  வருமொழி  வரையாது
கூறினமையின்  நிலாஅத்து  ஞான்றான்  என  இயல்பு  கணத்துக்கண்ணும்
ஏற்பன கொள்க.
 

(26)
 

229.

யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவு
மாமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே.

 

இது  வருமொழி  வல்லெழுத்து  விலக்கி  மெல்லெழுத்து  வகுத்தலின்
எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.
 

இதன் பொருள் யாமரக்   கிளவியும்  -  யாவென்னும்   மரத்தை
உணரநின்ற சொல்லும், பிடாவும் - பிடாவென்னுஞ்  சொல்லும், தளாவும் -
தளாவென்னுஞ்  சொல்லும், ஆம்  முப்பெயரும்  மெல்லெழுத்து  மிகும் -
ஆகிய மூன்று பெயரும் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும்
என்றவாறு.
 

உதாரணம் :  யாஅங்கோடு  பிடாஅங்கோடு  தளாஅங்கோடு செதிள்
தோல் பூ என வரும். வருமொழித் தொழிலாகிய மெல்லெழுத்து வகுப்பவே
வல்லெழுத்து விலக்கிற்றாம். இதற்கு விலக்காமையின் அகரம் பெற்றது.
 

(27)
 

230.

வல்லெழுத்து மிகினு மான மில்லை.
 

இஃது     எய்தியது     இகந்துபடாமற்     காத்தது,   அகரத்தோடு
மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்தும் பெறுமென்றலின்.
 

இதன் பொருள்:  வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - முற்கூறிய
மூன்று பெயர்க்கும்  மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும்
குற்றமில்லை என்றவாறு.


1. இச் சூத்திரம்  நிலைமொழித்  தொழிலை  விலக்கும்.  நிலைமொழித்
தொழிலை விலக்கல் 24-ம் சூத்திரத்து அகரப்பேற்றை விலக்கல்.