212உயிர்மயங்கியல்

அவண்நிலையா   னகரம்   ஒற்றும்   -   அவற்றுள்   ஆவும்   மாவும்
புணர்ச்சியிடத்து  அகரம்  நிலைபெறாவாய்  னகர  ஒற்றுப்பெற்று முடியும்,
எனவே  அருத்தாபத்தியான் மாமரத்திற்கு  அகரம்  நிலைபெற்று  ஙஞநம
ஒற்றும்  பெறுமாயிற்று ;  அவை வல்லெழுத்து அவண்  நிலையா -  அம்
மூன்று    பெயரும்     முற்கூறிய     வல்லெழுத்துப்   புணர்ச்சியிடத்து
நிலைபெறாவாய் வரும் என்றவாறு.
 

அவணிலையா என்றதனை இரண்டிடத்துங் கூட்டுக.
 

உதாரணம் :  மாஅங்கோடு செதிள் தோல் பூ ஆன்கோடு மான்கோடு
செவி தலை புறம் என வரும்.
 

ஆவும்  மாவும்  அவற்றோரன்ன  என்று 1ஞாபகமாகக்  கூறியவதனால்
மாங்கோடென அகர மின்றியும் வரும்.
 

இனி, அவண் என்றதனாற் காயாங்கோடு நுணாங்கோடு  ஆணாங்கோடு
என்றாற் போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறுதலும், அங்காக்கொண்டான்
இங்காக்கொண்டான்    உங்காக்கொண்டான்   எங்காக்கொண்டான்   என
இவற்றுள் ஏழாம் வேற்றுமை  யிடப்பொருள்  உணரநின்ற இடைச்சொற்கள்
வல்லெழுத்துப் பெறுதலும், ஆவின்கோடு மாவின்கோடு எனச் சிறுபான்மை
இன் பெறுதலும், பெற்றுழி வல்லெழுத்து வீழ்வுங் கொள்க.
 

மாட்டேற்றான் மூன்றுபெயரும் வல்லெழுத்துப் பெறாது மெல்லெழுத்துப்
பெற்றவாறும்     மாமரம்    அகரம்பெற்றவாறும்     இச்   சூத்திரத்தின்
2கண்ணழிவான் உணர்க.
 

(29)
 

232.

ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே.
 

இஃது    அவற்றுள்   ஆனென்றதற்கு   எய்தியதன்மேற்   சிறப்புவிதி
கூறுகின்றது.
 

இதன் பொருள் ஆனொற்று  -  ஆவென்னுஞ்  சொன் முன்னர்ப்
பெற்று நின்ற னகரவொற்று, அகரமொடும் நிலை


1. ஞாபகம் என்றது, ஞாபகம் என்னும்  உத்தியை. இதன் விளக்கத்தைப்
புணரியல் 22 - ம் சூத்திரம்  பார்க்க. ஞாபகமாகக்  கூறியதென்றது, ஆவும்
மாவும் 'அவற்றோ ரன்ன' என்ற விதியைப் பெறாது வரவும், பெற்றனபோல
அரிதும் பெரிதுமாகச் சூத்திரித்தமையை.
 

2. கண்ணழிவு - பதம் பிரித்துப் பொருள்கூறல்.