யிடன் உடைத்து - அகரத்தோடு கூடிநிற்கும் இடனும் உடைத்து என்றவாறு. |
இடனுடைத் தென்றவதனால் வன்கண மொழிந்த கணத்து இம் முடிபெனக் கொள்க. |
உதாரணம் : 'ஆனநெய் தெளித்து நான நீவி','ஆனமணி கறங்குங் கானத் தாங்கண்' என வரும், அகரமொடும் என்ற உம்மையால் அகரமின்றி வருதலே பெரும்பான்மை. ஆனெய் தெளித்து ஆன்மணி ஆன்வால் என வரும். |
(30) |
233. | ஆன்முன் வரூஉ மீகார பகரந் தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. |
|
இஃது ஆனென்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் - ஆனென்னுஞ் சொன்முன்னர் வருமொழியாய் வருகின்ற ஈகாரத்தோடு கூடிய பகரமாகிய மொழி, தான் மிகத் 1தோன்றி - அப் பகரமாகிய தான் மிக்கு நிற்ப நிலைமொழி னகரத்திற்குக் கேடுதோன்றி, குறுகலும் உரித்து - ஈகாரம் இகரமாகக் குறுகி நிற்றலும் உரித்து என்றவாறு. |
உதாரணம் :ஆப்பி என வரும். |
உம்மை எதிர்மறை யாகலான் ஆன்பீ என்றுமாம். |
(31) |
234. | குறியத னிறுதிச் சினைகெட வுகர மறிய வருதல் செய்யுளு ளுரித்தே. |
|
இஃது ஆகார ஈற்றுட் சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : குறியதன் இறுதிச் சினைகெட - குற்றெழுத்தின் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது இரண்டு மாத்திரையில் ஒரு மாத்திரை கெட்டு அஃது அகரமாய் நிற்ப, உகரம் அறியவருதல் செய்யுளுள் உரித்து - ஆண்டு உகரம் புலப்பட வருதல் செய்யுளிடத்து உரித்து என்றவாறு. |
|
1. தோன்றி என்பதை இலேசாகக் கொண்டு னகரத்திற்குக் கேடு கூறுவர் உரையாசிரியர். அதுவே பொருத்தமாம். |