220உயிர்மயங்கியல்

இதன் பொருள்:புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை - சுவையன்றிப்
புளியென்னும்  மரத்தினை உணரநின்ற சொல்லிற்கு அம்மென்னுஞ் சாரியை
வரும் என்றவாறு.
 

உதாரணம் :புளியங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
 

சாரியைப்   பேற்றிடை    முன்னர்ச்    சூத்திரத்து    1எழுத்துப்பேறு
கூறியவதனால் அம்முப்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.
 

(42)
 

245.

ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே.
 

இது  வல்லெழுத்து  விலக்கி  மெல்லெழுத்து   விதித்தலின்  எய்தியது
விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் :ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகும்  - அம்
மரப்பெயரன்றிச்  சுவைப்புளி  உணர  நின்ற  பெயர் வல்லெழுத்து மிகாது
மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : புளிங்கூழ்  சாறு தயிர்  பாளிதம்  என வரும். பாளிதம்
பாற்சோறு. இவற்றிக்கு இரண்டாமுருபு விரிக்க.
 

(43)
 

246.

வல்லெழுத்து மிகினு மான மில்லை
யொல்வழி யறிதல் வழக்கத் தான.

 

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் :  வல்லெழுத்து மிகினும்  மானமில்லை - சுவைப்புளி
மெல்லெழுத்தே   யன்றி   வல்லெழுத்து   மிக்குமுடியினுங்  குற்றமில்லை,
ஒல்வழியறிதல் வழக்கத்து  ஆன -  பொருந்தும் இடம் அறிக வழக்கிடத்து
என்றவாறு.
 

உதாரணம்:புளிக்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும்.
 

ஒல்வழி   என்றதனாற்   புளிச்சாறுபோல  ஏனைய  வழக்குப்  பயிற்சி
இலவென்று கொள்க. 


1. எழுத்துப்பேறு  என்றது,   மெல்லெழுத்துப்   பெறுமென  முன்னர்ச்
சூத்திரத்து விதித்ததை.