உயிர்மயங்கியல்221

வழக்கத்தான    என்றதனான்    இவ்   வீற்றுக்கண்   எடுத்தோத்தும்
இலேசுமின்றி  வருவன  வெல்லாவற்றிற்கும்   ஏற்குமாறு   செய்கையறிந்து
முடித்துக்கொள்க.   அவை    இன்னினிக்   கொண்டான்    அண்ணணிக்
கொண்டான்  என்பன  அடையடுத்தலின்  'இனியணி'  (எழு - 236) என்ற
வழி  முடியாவாய்  வல்லெழுத்துப்  பெற்றன.  கப்பிதந்தை  சென்னிதந்தை
என்பன   'அஃறிணை   விரவுப்பெயர்'  (எழு   -   155)    என்பதனுள்
இயல்பெய்தாது ஈண்டு வருமொழித்  தகர  அகரங்  கெட்டுக்   கப்பிந்தை
சென்னிந்தை என முடிந்தது.
 

கூதாளி கணவிரி  என்பனவற்றிற்கு அம்முக் கொடுத்து இகரங்கெடுத்துக்
கூதாளங்கோடு  கணவிரங்கோடு  செதிள் தோல்  பூ  என முடிக்க. 'கூதள
நறும்பூ' எனக்  குறைந்தம்  வரும். இனி  இவை  மகர  ஈறாயும் வழங்கும்.
அது  'வெண்  கூதாளத்துத்  தண்பூங்  கோதையர்'  என  அத்துப்பெற்று
மகரங்கெட்டுங் 'கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்ன'  என மகரங் கெட்டுங்
கணவிரங்கோடு என மெல்லெழுத்துப் பெற்றும் நிற்கும்.
 

கட்டி என நிறுத்தி இடி அகல் எனத்தந்து  டகரத்தில் இகரங்கெடுத்துக்
கட்டிடி     கட்டகல்   என    முடிக்க.    பருத்திக்குச்    சென்றானென
ஈற்றுவல்லெழுத்தும்   இக்குங்கொடுத்து   முடிக்க.  துளியத்துக்கொண்டான்
துளியிற்கொண்டான்  என அத்தும்  இன்னங் கொடுத்து முடிக்க. புளிங்காய்
வேட்கைத்தன்று    எனவும்    புளிம்பழம்    எனவும்   அம்முப்பெறாது
மெல்லெழுத்துப் பெற்று முடிதலுங் கொள்க. இன்னும் இதனானே உருபிற்குச்
சென்ற சாரியை  பொருட்கட்சென்றுழி  இயைபு  வல்லெழுத்துக் கெடுத்துக்
கிளியின்கால் புளியின்கோடு உதியின்கோடு என முடிக்க.
 

(44)
 

247.

நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்
கானிடை வருத லைய மின்றே.

 

இஃதுஈற்று வல்லெழுத்து விலக்கி ஆன்சாரியை விதிக்கின்றது.
 

இதன் பொருள் :நாள்  முன் தோன்றுந்  தொழினிலைக் கிளவிக்கு -
இகர ஈற்று நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றுந்