தொழிற் சொற்கு, ஆன் இடைவருதல் ஐயமின்று - ஆன்சாரியை இடைவந்து முடிதல் ஐயமின்று என்றவாறு. |
உதாரணம் : பரணியாற் கொண்டான் சோதியாற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். ஐயமின்றென்தனால் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. இதற்குக் கண்ணென் உருபு விரிக்க. |
(45) |
248. | திங்கண் முன்வரி னிக்கே சாரியை. |
|
இஃது இயைபு வல்லெழுத்தினோடு இக்கு வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. |
இதன் பொருள் :1திங்கள் முன்வரின் இக்கே சாரியை - திங்களை உணரநின்ற இகர ஈற்றுப் பெயர்களின் முன்னர்த் தொழினிலைக் கிளவிவரின் வருஞ்சாரியை இக்குச் சாரியையாம் என்றவாறு. |
உதாரணம் :ஆடிக்குக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இதற்குங் கண்ணென் உருபு விரிக்க. |
(46) |
249. | ஈகார விறுதி யாகார வியற்றே. |
|
இஃது ஈகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் :ஈகார இறுதி ஆகார இயற்று - ஈகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :ஈக்கடிது தீக்கடிது சிறிது தீது பெரிது என வரும். |
(47) |
250. | நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரு மீயென மரீஇய விடம்வரை கிளவியு மாவயின் வல்லெழுத் தியற்கை யாகும். |
|
1. திங்கள் என்றது மாதத்தை. |