உயிர்மயங்கியல்227

இதன் பொருள் :  வேற்றுமைக்கண்ணும்  -  உகர   ஈற்றுப்   பெயர்
வேற்றுமைப்பொருட்  புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று  -  அகர  ஈற்று
அல்வழியோடு  ஒருதன்மைத்தாய்  வல்லெழுத்துவந்துழி  அவ்வல்லெழுத்து
மிக்குமுடியும் என்றவாறு.
 

உதாரணம் : கடுக்காய் செதிள் தோல் பூ எனவும், கடுக்கடுமை எனவும்
வரும்.
 

(57)
 

260.

எருவுஞ் செருவு மம்மொடு சிவணித்
திரிபிட னுடைய தெரியுங் காலை
யம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே
தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை.

  

இஃது அவ்  வீற்றுள்   ஒன்றற்கு  வல்லெழுத்து   விலக்கிச்  சாரியை
விதியும்   ஒன்றற்கு   வல்லெழுத்தினோடு   சாரியை  விதியுஞ்  சாரியை
பெறாதவழி வல்லெழுத்து மெல்லெழுத்துப் பேறுங் கூறுகின்றது.
 

இதன் பொருள் :  எருவுஞ்   செருவும்    அம்மொடு   சிவணி   -
எருவென்னுஞ் சொல்லும் செருவென்னுஞ் சொல்லும் அம்முச் சாரியையோடு
பொருந்தி,  திரிபு  இடனுடைய  தெரியுங்காலை - அதிகார வல்லெழுத்துப்
பெறாமல்   திரியும்   இடனுடைய   ஆராயுங்காலத்து,  அம்மின்  மகரஞ்
செருவயிற்  கெடும்  -  ஆண்டு   அம்முச்சாரியையினது  ஈற்றின் மகரஞ்
செருவென்னுஞ்  சொல்லிடத்துக்  கெட்டுமுடியும், வல்லெழுத்து  மிகூஉம் -
ஆண்டுச்  செருவின்கண்   வல்லெழுத்து   மிக்கு முடியும், இயற்கைத் தம்
ஒற்று மிகூஉம்  - அம்முப்  பெறாதவழி  இரண்டிற்குந்  தமக்கு இனமாகிய
வல்லொற்றும் மெல்லொற்றும் மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : எருவென  நிறுத்திக் குழி சேறு  தாது பூழி  எனத் தந்து
அம்முக்கொடுத்து   'அம்மி   னிறுதி   கசதக்   காலை'   (எழு  -  129)
என்பதனால்  எருவங்குழி  சேறு  தாது  பூழி  யென முடிக்க.  செருவென
நிறுத்திக் களம்  சேனை தானை பறை எனத்தந்து இடை அம்முக்கொடுத்து
மகரங் கெடுத்து வல்லெழுத்துக்  கொடுத்துச் செருவக்களம் சேனை தானை
பறையென முடிக்க. இனி அம்முப் பெறாதவழி எருக்குழி எருங்குழி