எடுத்தோதி முடிப்பாராதலின் அம்முடிபு பெறாமையின் 1ஈற்றுப் பொதுவிதியான் முடியாது இலேசான் முடித்தாம். |
(63) |
266. | வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. |
|
இஃது ஊகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : வேற்றுமைக்கண்ணும் அதனோ ரற்று - ஊகார ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆகார ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு. |
உதாரணம் : தழூஉக்கடுமை சிறுமை தீமை பெருமை, கொண்மூக்குழாம் செலவு தோற்றம் மறைவு என வரும். |
(64) |
267. | குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கு நிற்றல் வேண்டு முகரக் கிளவி. |
|
இஃது இயைபு வல்லெழுத்தினோடு உகரம் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள்: குற்றெழுத்து இம்பரும் - குற்றெழுத்தின்பின் வந்த ஊகார ஈற்று மொழிக்கும், ஓரெழுத்து மொழிக்கும் - ஓரெழுத் தொருமொழியாகிய ஊகார ஈற்று மொழிக்கும், உகரக் கிளவி நிற்றல் வேண்டும் - உகரமாகிய எழுத்து நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. |
உதாரணம் : உடூஉக்குறை செய்கை தலை புறம் எனவும், தூஉக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும். |
நிற்றல் என்றதனான் உயர்திணைப் பெயர்க்கும் வல்லெழுத்தும் உகரமுங் கொடுக்க. ஆடூஉக்கை மகடூஉக்கை செவி தலைபுறம் என வரும். இவை தொகை மரபினுள் 2இயல்பாதல் எய்தியவற்றை ஈண்டு இருவழிக்கண்ணும் முடித்தார், ஈற்றுப் பொது ஒப்புமை கண்டு. |
(65) |
|
1. ஈற்றுப் பொதுவிதி என்றது, 'ஊகார விறுதி யாகாரவியற்றே' என்றதை. |
2. இயல்பாத லெய்திய தென்றது - தொகைமரபினுள் 11-ம் சூத்திரத்துச் சொல்லிய விதியால் இயல்பானமையை. |