கண் வருமென்ற தேற்றப்பொருண்மையில் எகரமுஞ் சிறப்புப் பொருண்மையில் ஒகரமும் மூன்றிடத்தும் வருமென்ற இலக்கணத்தனவாம், வல்லெழுத்து மிகா - வல்லெழுத்துமிக்கு முடியா, எனவே முன்னிலைக்கண் வருமென்ற எகர ஒகரங்கள் வல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு. |
உதாரணம் : யானேஎகொண்டேன் நீயேஎகொண்டாய் அவனேஎகொண்டான் எனவும், யானோஒகொடியன் நீயோஒகொடியை அவனோஒகொடியன் எனவும் பெயர்க்கண் ஈறாய் இயல்பாய் வந்தவாறு காண்க. இது முன்னர் எய்திய இலக்கணம் இகவாமற் காத்தார். முன் நின்ற சூத்திரத்தின் முன்னிலைக்கும் வல்லெழுத்து மிகுத்து எய்தாத தெய்துவித்தார். இச் சூத்திரத்திற்கு அளபெடுத்தல் 'தெளிவினேயும்' (சொல் - 261) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. எனவே, முடிவு பெற்றுழி இங்ஙனம் இடைச்சொல்லும் எடுத்தோதிப் புணர்ப்பரென்பதூஉம் பெற்றாம். |
(71) |
274. | ஏகார விறுதி யூகார வியற்றே. |
|
இது நிறுத்தமுறையானே ஏகார ஈறு அல்வழிக்கட் புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் :ஏகார இறுதி - ஏகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண், ஊகார இயற்று - ஊகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :ஏக்கடிது சேக்கடிது சிறிது தீது பெரிது என வரும். |
(72) |
275. | மாறுகோ ளெச்சமும் வினாவு மெண்ணுங் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். |
|
இஃது இடைச்சொற்கள் இயல்பாய்ப் புணர்கவென எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் :மாறுகோள் எச்சமும் - மாறுகோடலையுடைய எச்சப் பொருண்மைக்கண்வரும் ஏகார ஈற்று இடைச் சொல்லும், வினாவும் - வினாப்பொருண்மைக்கண் வரும் ஏகார |