ஞெமையும் - ஞெமை யென்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும், நமையும் - நமை யென்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும், ஆ முப் பெயரும் - ஆகிய அம் மூன்று பெயரும், சேமர இயல - வல்லெழுத்து மிகாது சேமரம் போல மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :விசைங்கோடு ஞெமைக்கோடு நமைங்கோடு செதிள் தோல் பூ என வரும். இவை 1'கசதப' முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து என்று உணர்க. |
(80) |
283. | பனையு மரையு மாவிரைக் கிளவியு நினையுங் காலை யம்மொடு சிவணு மையெ னிறுதி யரைவரைந்து கெடுமே மெய்யவ ணொழிய வென்மனார் புலவர். |
|
இஃது இயைபு வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தது. |
இதன் பொருள் : பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் - பனையென்னும் பெயரும் அரையென்னும் பெயரும் ஆவிரையென்னும் பெயரும், நினையுங்காலை அம்மொடு சிவணும் - ஆராயுங்காலத்து வல்லெழுத்து மிகாது அம்முச்சாரியையொடு பொருந்தி முடியும், ஐயென் இறுதி அரை வரைந்து கெடும் - அவ்விடத்து ஐயென்னும் ஈறு அரையென்னும் சொல்லை நீக்கி ஏனை இரண்டிற்குங் கெடும், மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் - தன்னான் ஊரப்பட்ட மெய்கெடாது அச் சொல்லிடத்தே நிற்க என்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் :பனை ஆவிரை என நிறுத்தி அம்மு வருவித்து ஐகாரங் கெடுத்து ஒற்றின் மேலே அகரமேற்றிப் பனங்காய் ஆவிரங்கோடு செதிள் தோல் பூ என வரும். அரையென நிறுத்தி அம்முக்கொடுத்து ஐகாரங்கெடாது அரையங்கோடு செதிள் தோல் பூ என முடிக்க. வல்லெழுத்துக்கேடு மேலே 'கடிநிலை யின்று' (எழு - 285) என்றனாற் கூறுதும். |
நினையுங்காலை யென்றதனால் தூதுணை வழுதுணை தில்லை ஓலை தாழை என நிறுத்தி அம்முக்கொடுத்து ஐகாரங் |
|
1. 'கசதப முதலிய' என்பது எழு. 143 - ம் சூத்திரம். |