242உயிர்மயங்கியல்

திங்கள்    முற்கூறிய    முறையன்றிக்    கூற்றினால்   உழைங்கோடு
அமைங்கோடு   உடைங்கோடு   என    மெல்லெழுத்துக்    கொடுத்துங்
கலைங்கோடு  கலைக்கோடு என  உறழ்ச்சி எய்துவித்துங் கரியவற்றுக்கோடு
குறியவற்றுக்கோடு நெடியவற்றுக்கோடு என ஐகார ஈற்றுப் பண்புப்பெயர்க்கு
வற்றுக்கொடுத்து    ஐகாரங்    கெடுத்து     வற்றுமிசை    யொற்றென்று
ஒற்றுக்கெடுத்தும்   அவையத்துக்கொண்டான்  அவையிற்கொண்டான்  என
அத்தும்       இன்னுங்       கொடுத்தும்      பனையின்     மாண்பு
கேட்டையினாட்டினானென       இயல்புகணத்துக்கண்       இன்சாரியை
கொடுத்தும்முடிக்க. ஐகார ஈறு  இன் சாரியை  பெறுதல் தொகை  மரபினுட்
கூறாமையின் ஈண்டுக்கொண்டாம்.
 

(84)
 

287.

மழையென் கிளவி வளியிய னிலையும்.
 

இது   வல்லெழுத்தினோடு   அத்து  வகுத்தலின்  எய்தியதன்   மேற்
சிறப்புவிதியும்  இயைபு வல்லெழுத்து  விலக்கி  இன் வகுத்தலின் எய்தியது
விலக்கிப் பிறிதுவிதியுங் கூறுகின்றது.
 

இதன் பொருள் :  மழையென்   கிளவி   -  மழையென்னும்  ஐகார
ஈற்றுச்சொல்,   வளியியல்   நிலையும்  -  வளியென்னுஞ்சொல்   அத்தும்
இன்னும் பெற்றுமுடிந்த இயல்பின்கண்ணே நின்று முடியும் என்றவாறு.
 

உதாரணம் :மழையத்துக்கொண்டான் மழையிற்கொண்டான் சென்றான்
தந்தான் போயினான் என வரும்.
 

ஈண்டு  இன்பெற்றுழிவல்லெழுத்துக்கோடு  'கடிநிலை  யின்று'  (எழு -
285)  என்றதனாற்   கொள்க.   சாரியைப்பேறு   வருமொழி   வரையாது
கூறினமையின்  இயல்புகண்த்துக்கண்ணுங்  கொள்க.  மழையத்துஞான்றான்
மழையின்ஞான்றான்  நிறுத்தினான்  மாட்டினான்  வந்தான்   அடைந்தான்
என ஒட்டுக.
 

(85)
 

288.

செய்யுண் மருங்கின் வேட்கை யென்னு
மையெ னிறுதி யவாமுன் வரினே
மெய்யொடுங் கெடுத லென்மனார் புலவர்
டகார ணகார மாதல் வேண்டும்.

  

இது வேற்றுமைக்கட் செய்யுண் முடிபு கூறுகின்றது.