உயிர்மயங்கியல்243

இதன் பொருள் :செய்யுண்  மருங்கின்  வேட்கை  என்னும்  ஐயென்
இறுதி - செய்யுளிடத்து வேட்கையென்னும் ஐகார ஈற்றுச்சொல், அவா முன்
வரின்  -  அவாவென்னுஞ்  சொற்கு  முன்னர்   வரின்,    மெய்யொடுங்
கெடுதல் என்மனார்  புலவர் - அவ் வைகாரந்  தான்ஊர்ந்த மெய்யோடுங்
கூடக்  கெடுமென்று கூறுவர் புலவர், டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் -
அவ்விடத்து  நின்ற  டகார ஒற்று  ணகார ஒற்றாய்த்  திரிதல்  வேண்டும்
என்றவாறு.
 

உதாரணம் :'வேணவாநலிய வெய்யவுயிரா' என வரும்.
 

வேட்கையாவது பொருள்கள்மேல் தோன்றும்  பற்றுள்ளம். அவாவாவது
அப்  பொருள்களைப்  பெறவேண்டுமென்று  மேன்மேல்  நிகழும் ஆசை.
எனவே, வேட்கையாலுண்டாகிய அவாவென மூன்றனுருபு விரிந்தது. இதனை
வேட்கையும் அவாவுமென அல்வழியென்பாரும் உளர்.  இங்ஙனங் கூறுவார்
1பாறங்கல் என்பதனை அம்முக்கொடுத்து ஈண்டுமுடிப்பர். 
 

(86)
 

289.

ஓகார விறுதி யேகார வியற்றே.
 

இஃது ஓகார ஈற்று அல்வழிமுடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் :ஓகார  இறுதி  ஏகார   இயற்று  -  ஓகார  ஈற்றுப்
பெயர்ச்சொல் ஏகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்த வந்துழி
அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் :ஓக்கடிது சேரக்கடிது சிறிது தீது பெரிது என வரும்.
 

(87)
 

290.

மாறுகொ ளெச்சமும் வினாவு மையமுங்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்.

  

இஃது இடைச்சொன் முடிபு கூறலின் எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள் :மாறுகொள்  எச்சமும்  - மாறுபாட்டினைக்கொண்ட
எச்சப்பொருண்மையை ஒழிபாகவுடைய


1. பாறாங்கல்  என 82-ஞ்  சூத்திரத்து  இலேசினான்  முடித்த அல்வழி
முடிபை, இதனோடு அம்சாரியை கொடுத்து பாறங்கல் என முடிப்பாருமுளர்
என்பது கருத்து.