250 புள்ளிமயங்கியல்

301.

ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே.
 

இஃது அதற்கு எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள் :ஆவயின் - அவ் வெரிந் என்னுஞ் சொல் அவ்வாறு
ஈறு   கெட்டு  நின்ற   இடத்து,  வல்லெழுத்து   மிகுதலும்   உரித்து - 
மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து என்றவாறு.
  

உதாரணம் :வெரிக்குறை செய்கை தலை புறம் என வரும்.
 

(6)
 

302.

ணகார விறுதி வல்லெழுத் தியையின்
டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.

 

இது   நிறுத்தமுறையானே  ணகார   ஈறு   வேற்றுமைப்  பொருட்கட்
புணருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் :ணகார இறுதி - ணகார ஈற்றுப்பெயர், வல்லெழுத்து
இயையின் - வல்லெழுத்து  முதன்மொழி  வந்து  இயையின்,  டகாரமாகம்
வேற்றுமைப்  பொருட்கு  -  டகாரமாகத்  திரிந்து  முடியும்  வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்கண் என்றவாறு.
 

உதாரணம் :மட்குடம்  சாடி  தூதை  பானை  என  வரும். மண்கை
புண்கை என்பன 1இரண்டாவதன் திரிபின் முடிந்தன.
 

கவண்கால் பரண்கால் என்பன மேல் முடித்தும்.
 

(7)
 

303.

ஆணும் பெண்ணு மஃறிணை யியற்கை.
 

இஃது  இவ்  வீற்று  விரவுப்பெயருட் சிலவற்றிற்கு எய்தியது  விலக்கிப்
பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் :  ஆணும்     பெண்ணும்    -    ஆணென்னும்
விரவுப்பெயரும் பெண்ணென்னும் விரவுப்பெயரும்,  அஃறிணை இயற்கை -
தொகைமரபினுள் 'மொழிமுத லாகும்'


1. இரண்டாவதன்றிரிபு   என்றது,  தொகைமரபு  15 - ம்  சூத்திரத்தாற்
கூறிய இரண்டாம் வேற்றுமைத் திரிபை.