(எழு 147) என்பதன்கண் அஃறிணைப்பெயர் முடிந்த இயல்புபோலத் தாமும் வேற்றுமைக்கண் இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் :ஆண்கை பெண்கை செவி தலை புறம் எனவரும். |
இது தொகைமரபினுள் 'அஃறிணை விரவுப்பெயர்' (எழு - 155) என்பதனுள் முடிந்த இயல்பன்றோவெனின், இவை ஆண்டு முடிந்தனபோலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப்படுவன அன்றி 1இருதிணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதலின், அஃறிணைப் பெயரது இயல்போடு மாட்டெறிந்து முடித்தாரென்க. ஆண்கடிது பெண்கடிது என்னும் அல்வழிமுடிபு 'மொழிமுத லாகும்' (எழு - 147) என்பதன் கண் வருமொழி முற்கூறியவதனான் முடிக்க. |
(8) |
304. | ஆண்மரக் கிளவி யரைமர வியற்றே. |
|
இது திரிபுவிலக்கிச் சாரியை வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் :ஆண்மரக் கிளவி - ஆண்பாலை உணர்த்தாது ஆணென்னும் மரத்தினை உணரநின்ற சொல், அரை மர இயற்று - அரை யென்னும் மரம் அம்முப்பெற்ற இயல் பிற்றாய்த் தானும் அம்முப்பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் :ஆணங்கோடு செதிள் தோல் பூ என வரும். |
ஒன்றென முடித்தலான் இயல்புகணத்துங் கொள்க. ஆணநார் இலை என வரும். |
2விரவுப்பெய ரன்றென்றற்கு மரமென்றார். |
(9) |
305 | விண்ணென வரூஉங் காயப் பெயர்வயி னுண்மையு முரித்தே யத்தென் சாரியை செய்யுண் மருங்கிற் றொழில்வரு காலை. |
|
இது செய்யுளுள் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தது. |
|
1. இருதிணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதல் என்றது, ஆண் வந்தான் ஆண் வந்தது என முடியாமல் இருதிணைக்கண்ணும் ஆண் வந்தது என முடிதலை. |
2. விரவுப்பெயரென்றது, ஆண் என்னும் பொதுப்பெயரை. |