252 புள்ளிமயங்கியல்

இதன் பொருள் விண்என   வரூஉங்   காயப்   பெயர்வயின்   -
விண்ணென்று  சொல்லவருகிற  ஆகாயத்தை   உணரநின்ற  பெயர்க்கண்,
அத்து  என்  சாரியை  மிகுதலும்   உரித்து  -  அத்தென்னுஞ்  சாரியை
உண்டாதலும்  உரித்து  இல்லையாதலும்  உரித்து,   செய்யுள்   மருங்கில்
தொழில்வருகாலை  -   செய்யுளிடத்துத்   தொழிற்சொல்   வருங்காலத்து
என்றவாறு.
 

உதாரணம் :'விண்ணத்துக் கொட்கும் வண்ணத் தமரர்' 'விண்ணத்துக்
கொட்கும் விரைசெல்  லூர்தியோய்' எனவும், 'விண்குத்து நீள்வரை வெற்ப
களைபவோ'  (நாலடி - 226)  எனவும் வரும். விண்ணென்னும் குறிப்பினை
நீக்குதற்குக் காயமென்றார்.
 

விண்வத்துக்கொட்கும் என உடம்படுமெய் புணர்ந்து நிற்றலுங் கொள்க.
1அதிகார வல்லெழுத்தின்மையிற் சாரியை வல்லெழுத்துக் கொடுக்க.
 

(10)
 

304.

தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல.
 

இஃது   இவ்   வீற்றுட்   சிலவற்றிக்குத்   திரிபு   விலக்கி  உகரமும்
வல்லெழுத்தும் விதிக்கின்றது.
 

இதன் பொருள் :தொழிற்பெயர்   எல்லாம்  தொழிற்பெயர்  இயல -
அல்வழிக்கண்ணும்  வேற்றுமைக்கண்ணும்  ஞகார ஈற்றுத்  தொழிற்பெயரது
இயல்பிற்றாய்  வன்கணம்   வந்துழி  வல்லெழுத்தும்  உகரமும்  பெற்றும்
மென்கணத்தும்   இடைக்கணத்து   வகரத்தும்  உகரம்  பெற்றும்  முடியும்
என்றவாறு.
 

உதாரணம் :2மண்ணுக்கடிது   பண்ணுக்கடிது  சிறிது   தீது   பெரிது
ஞான்றது  நீண்டது  மாண்டது  வலிது  எனவும்,  மண்ணுக்கடுமை சிறுமை
தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்.


1. அதிகார  வல்லெழுத்தின்மை  என்றது,  உயிரீற்றுக்காயின்  அதிகார
வல்லெழுத்து உண்டு ; இது மெய்யீறானபடியால் அதிகார வல்லெழுத்தின்று
என்றபடி. ஆதலின் வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க என்றபடி. உயிரீற்றின்
முன்னன்றி யரழ வொழிந்த மெய்யீற்றின்முன் வல்லினம் மிகாதென்க.
 

2. மண்ணுதல்  -  கழுவுதல்.  வெண்   -   ஓராறு.     எண்ணுப்பாறு
எண்ணின்கட்பாறு என விரியும். எண்-எள். பாறு-பருந்து.