புள்ளிமயங்கியல்271

தன்னின   முடித்த  லென்பதனால்   அம்மு   தம்மு   நம்மு  எனச்
சாரியைக்கண்ணும் உகரம் வருதல் கொள்க.
 

(33)
 

329.
 

வேற்றமை யாயி னேனை யிரண்டுந்
தோற்றம் வேண்டு மக்கென் சாரியை. 

 

இது  மேல்  முடிபுகூறிய   மூன்றனுள்   இரண்டற்கு  வேற்றுமைக்கண்
வேறோர் முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : வேற்றுமை   யாயின்  -   வேற்றுமைப்   பொருட்
புணர்ச்சியாயின்,  ஏனை   இரண்டும்   தோற்றம்   வேண்டும்  அக்கென்
சாரியை  -  இறுதியில்  உருமொழிந்த  இரண்டும்  அக்கென்னுஞ் சாரியை
தோன்றி முடிதலை வேண்டும் ஆசிரியன் என்றவாறு.
 

உதாரணம் : ஈமக்குடம்  கம்மக்குடம்  சாடி  தூதை  பானை எனவும்,
ஞாற்சி நெருப்பு மாட்சி விறகு எனவும் ஒட்டுக.
 

அக்கு வகுப்பவே நிலைமொழித் தொழிலாகிய உகரங்கெட்டு 1முற்கூறிய
வல்லெழுத்து விலக்கப்படாமையின் நின்று முடிந்தது.
 

வன்கணத்திற்கு       முன்னின்ற       சூத்திரத்திற்        கூறியது
2குணவேற்றுமைக்கென்றும் ஈண்டுக்  கூறியது  பொருட் புணர்ச்சிக்கென்றுங்
கொள்க.
 

(34)
 

330. 

வகார மிசையு மகாரங் குறுகும்.
 

இது  முன்னர்  'அரையளவு  குறுகல்'  (எழு - 13)  எனவும், 'னகாரை
முன்னர்'  (எழு - 52)   எனவுங்   கூறிய   மகரம்  இருமொழிக்கண்ணுங்
குறுகுமென அதன் ஈற்றகத்து எய்தாத தெய்துவிக்கின்றது.
 

இதன் பொருள் : வகார   மிசையும்   மகாரங்  குறுகும்  -  மகாரம்
ஒருமொழிக்கண்ணேயன்றி வகாரத்தின்மேலுங் குறுகும் என்றவாறு.
 

உதாரணம் : நிலம்வலிது வரும்வண்ணக்கண் என வரும்.
 

(35) 

1. முற்கூறிய   வல்லெழுத்தென்றது,   32 - ம்   சூத்திரத்தாற்  பெற்ற
வல்லெழுத்தை.
 

2. குணவேற்றுமை  என்றது -  கடுமை முதலிய குணச் சொற்கள் வந்து
புணரும் வேற்றுமைப் புணர்ச்சியை.