331. | நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன வத்து மான்மிசை வரைநிலை யின்றே யொற்றுமெய் கெடுத லென்மனார் புலவர். |
|
இஃது இவ் வீற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன - மகர ஈற்று நாட்பெயர் இகர ஈற்று நாட்பெயர்போல ஆன் சாரியைபெற்று முடியும், அத்தும் ஆன்மிசை வரைநிலை இன்று - அத்துச்சாரியை ஆன்சாரியைமேலும் பிறசாரியைமேலும் வருதல் நீக்கு நிலைமையின்று, ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர் - ஆண்டு நிலைமொழி மகர ஒற்றுக் கெடுக என்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உம்மையை ஆன்மிசையுமென மாறுக. |
உதாரணம் : மகத்தாற் கொண்டான் ஓணத்தாற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என்க. ஏனை நாட்களோடும் ஒட்டுக. மகர ஒற்றுக் கெடுத்து 'அத்தி னகர மகரமுனை யில்லை' (எழு - 125) என அகரங் கெடுத்துக் 'குற்றிய லுகரமு மற்றென' (எழு - 105) என ஆனேற்றி 'ஆனி னகரமும்' (எழு - 124) என்றதனான் றகரமாக்கி முடிக்க. மகத்துஞான்று கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என ஞான்றென்னுஞ் சாரியைமேல் அத்து வந்தது. |
வரையாது கூறினமையின் இம்முடிபு நான்குகணத்துங் கொள்க. மகத்தான் ஞாற்றினான் நிறுத்தினான் மாய்ந்தான் வந்தான் அடைந்தான் என வரும். |
(36) |
332. | னகார விறுதி வல்லெழுத் தியையின் றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. |
|
இது நிறுத்தமுறையானே னகர இறுதி வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : னகார இறுதி வல்லெழுத்து இயையின் றகாரமாகும் - னகார ஈற்றுப்பெயர் வல்லெழுத்து முதன் மொழி வருமொழியாய் வந்து இயையின் றகரமாகும், வேற் |