280 புள்ளிமயங்கியல்

'மின்னுச்செய்   விளக்கத்துப்   பின்னுப்பிணி   யவிழ்ந்த'    எனவும்,
பன்னுக்கடிது   கன்னுக்கடிது   சிறிது  தீது   பெரிது  ஞான்றது  நீண்டது
மாண்டது  வலிது  எனவும், மின்னுக்கடுமை பின்னுக்கடுமை பன்னுக்கடுமை
கன்னுக்கடுமை  சிறுமை  தீமை  பெருமை  ஞாற்சி  நீட்சி மாட்சி வலிமை
எனவும் வரும்.
 

தொழிற்பெயரெல்லாந்      தொழிற்பெயரியல      என்று     ஓதாது
கிளந்தோதினார்.  இவை தொழினிலைக்கண்ணன்றி வேறு தம் பொருளுணர
நின்ற வழியும் இம்முடிபு எய்துமென்றற்கு.
 

1மின்னென்பது    மின்னுதற்றொழிலும்    'மின்னுநிமிர்ந்தன்ன'    என
மின்னெனப்படுவதோர் பொருளும் உணர்த்தும். ஏனையவும் அன்ன.
 

(50)
 

346.

வேற்றுமை யாயி னேனை யெகினொடு
தோற்ற மொக்குங் கன்னென் கிளவி.

 

இது  நிலைமொழிக்கண்  உகரம்விலக்கி  அகரம் வகுத்தலின் எய்தியது
விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : வேற்றுமையாயின்   ஏனை   எகினொடு  தோற்றம்
ஒக்கும்-வேற்றுமைப்   பொருட்   புணர்ச்சியாயின்   ஒழிந்த   மரமல்லாத
எகினொடு   தோற்றம்   ஒத்து   அகரமும் வல்லெழுத்தும் பெற்றுமுடியும்,
கன் என் கிளவி-கன்னென்னுஞ் சொல் என்றவாறு.
 

உதாரணம் : கன்னக்குடம்  சாடி தூதை  பானை ஞாற்சி நீட்சி மாட்சி
வலிமை என வரும். கன்னக்கடுமை எனக்குண வேற்றுமையுஞ் சிறுபான்மை
கொள்க.
 

தோற்றமென்றதனால்     அல்வழிக்கண்    வன்கணத்து    அகரமும்
மெல்லெழுத்தும் ஏனைக்கணத்து அகரமுங் கொள்க. கன் 


1. மின் என்பது, மின்னுதற் றொழிலன்றி மின்னலை உணர்த்து மிடத்துப்
பெயராம். அதுபற்றிப் பொருள் என்றார்.  பின் - பின்னுதலையும், பின்னிய
கூந்தலையு முணர்த்தும். பன்-சொல்லுதலையும் சொல்லையுமுணர்த்தும். கன்
- கன்னான்தொழிலையும் கன்னானையுமுணர்த்தும்.