இதன் பொருள் : ஆதனும் பூதனும் - முற்கூறிய இயற்பெயருள் ஆதனும் பூதனும் என்னும் இயற்பெயர்கள் தந்தையென்னும் முறைப்பெயரோடு முடியுங்கால், கூறிய இயல்பொடு - முற்கூறிய நிலைமொழி அன் கெடுதலும் வருமொழித் தகரவொற்றுக் கெடுதலுமாகிய செய்கைகளுடனே, பெயரொற்று அகரந் துவரக்கெடும் - நிலைமொழிப்பெயரில் அன்கெட நின்ற தகரவொற்றும் வருமொழியில் தகரவொற்றுக் கெட நின்ற அகரமும் முற்றக்கெட்டு முடியும் என்றவாறு. |
உதாரணம் : ஆந்தை பூந்தை என வரும். |
இயல்பென்றதனாற் பெயரொற்றும் அகரமும் கெடாதே நிற்றலுங் கொள்க. ஆதந்தை பூதந்தை என வரும். |
இனித் துவரவென்றதனால் அழான் புழான் என நிறுத்தித் தந்தை என வருவித்து நிலைமொழி னகரமும் வருமொழித் தகரமும் அகரமும் கெடுத்து அழாந்தை புழாந்தை என முடிக்க. |
(53) |
349. | சிறப்பொடு வருவழி யியற்கை யாகும். |
|
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : சிறப்பொடு வருவழி - அவ் வியற்பெயர் பண்பு அடுத்து வரும்வழி, இயற்கையாகும் - முற்கூறிய இரு வகைச் செய்கையுந் தவிர்ந்து இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் : பெருஞ்சாத்தன்றந்தை பெருங்கொற்றன்றந்தை என வரும். கொற்றங்கொற்றன்றந்தை சாத்தங்கொற்றன்றந்தை என்றாற் போல்வன பண்பன்றி அடை அடுத்தனவாதலிற் புறனடையான் முடிக்க. |
(54) |
350. | அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியு நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண் முறைதொகூஉ மருங்கி னான. |
|
இது மேலதற்கு வேறோர் வருமொழிக்கண் எய்தாத தெய்துவித்தது. |