புள்ளிமயங்கியல்283

இதன் பொருள் : அப்பெயர்      மக்கள்     ஆனமுறைதொகூஉம்
மருங்கினும்  -   அவ்வியற்பெயர்  முன்னர்த்   தந்தையன்றி   மகனாகிய
முறைப்பெயர்  வந்து  தொகுமிடத்தினும்,  மெய்யொழித்து  அன் கெடுவழி
அம்மென்  சாரியை  நிற்றலும்  உரித்து -  அவ்வியற்பெயரில்  தான்ஏறிய
மெய்நிற்க அன்கெட்டு அம்முச்சாரியை வந்து நிற்றலும் உரித்து என்றவாறு.
 

ஆன   என்பதனை   மக்களோடும்,   உம்மையை    மருங்கினோடுங்
கூட்டுக.   முறைதொகூஉ  மருங்கினென்றது   இன்னாற்கு   மகனென்னும்
முறைப்பெயராய்ச் சேருமிடத் தென்றவாறு.
 

உதாரணம் : கொற்றங்கொற்றன்,  சாத்தங்கொற்றன்  என நிலைமொழி
அன் கெட்டுழி அம்மு வந்தது.  இவற்றிற்கு அதுவெனுருபு விரியாது அதன்
உடைமைப்பொருள் விரிக்க. இது முறைப்பெயர்.
 

இனி   உம்மையாற்  1கொற்றங்குடி  சாத்தங்குடி   எனப்  பிற  பெயர்
தொக்கனவுங் கொள்க.
 

மெய்யொழித்    தென்றதனானே    கொற்றமங்கலம்    சாத்தமங்கலம்
என்பனவற்றின்கண்    அம்மின்     மகரங்கெடுதலும்    வேட்டமங்கலம்
வேட்டங்குடி என்பனவற்றின் நிலைமொழி யொற்று இரட்டுதலுங் கொள்க. 
 

(55)
 

351.

தானும் பேனுங் கோனு மென்னு
மாமுறை யியற்பெயர் திரிபிட னிலவே.

 

இது மேலதற்கு ஒருவழி எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : தானும்   பேனுங்   கோனும்  என்னும்   ஆமுறை
இயற்பெயர்  -  அவ்வியற்பெயருள்   தானும்  பேனுங்   கோனுமென்னும்
அம்முறையினையுடைய     இயற்பெயர்கள்     தந்தையொடும்    மக்கள்
முறைமையொடும்  புணரும்வழி,  திரிபிடனில  -  முற்கூறிய  திரிபுகளின்றி
இயல்பாய் முடியும் என்றவாறு. 


1. கொற்றங்குடி - இது அன்கெட்டு. அம்முப்பெற்றுத் திரிந்து முடிந்தது.
வேட்டமங்கலம்  -  'வேடன்'  அன்கெட்டு  அம்முப்பெற்று மகரங்கெட்டு
டகரமிரட்டி வேட்டமங்கலமென்றாயிற்று.