உதாரணம் : மகன்றாய்க்கலாம் செரு துறத்தல் பகைத்தல் என வரும். மகன் தாயோடு கலாய்த்த கலாம் என விரியும். ஏனையவற்றிற்கும் ஏற்கும் உருபு விரிக்க. வினை ஈண்டுப் பகை மேற்று. |
(64) |
360. | மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே. |
|
இஃது எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : மெல்லெழுத்து உறழும் மொழியுமாருள - யகர ஈற்றுள் அதிகார வல்லெழுத்தினோடு மெல்லெழுத்து மிக்கு உறழ்ந்து முடிவனவும் உள என்றவாறு. |
உதாரணம் : வேய்க்குறை வேய்ங்குறை செய்கை தலை புறம் என வரும். |
(65) |
361. | அல்வழி யெல்லா மியல்பென மொழிப. |
|
இஃது அவ் வீற்று அல்வழிக்கு எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : அல்வழி எல்லாம் இயல்பென மொழிப - யகர ஈற்று அல்வழியெல்லாம் இயல்பாய் முடியும் என்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் : நாய்கடிது சிறிது தீது பெரிது என வரும். |
எல்லாமென்றதனால் அவ்வாய்க்கொண்டான் இவ்வாய்க்கொண்டான் உவ்வாய்க்கொண்டான் எவ்வாய்க்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என உருபின் பொருள்பட முடிவனவும், தாய்க்கொண்டான் தூய்ப்பெய்தான் என்றாற்போலும் வினையெச்சமும், பொய்ச்சொல் மெய்ச்சொல் எய்ப்பன்றி என்றாற்போலும் பண்புத்தொகையும், வேய்கடிது வேய்க்கடிது என்னும் அல்வழி யுறழ்ச்சி முடிவுங் கொள்க. |
(66) |
362. | ரகார விறுதி யகார வியற்றே. |
|
இது நிறுத்தமுறையானே ரகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : ரகார இறுதி - ரகார ஈற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், யகார இயற்று - யகார |