ஈற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : தேர்க்கால் செலவு தலை புறம் என வரும். |
இம் மாட்டேற்றினை யகர ஈற்று வேற்றுமை அல்வழியென்னும் இரண்டையுங் கருதி மாட்டெறிந்தாரென்பார் அல்வழி முடிபும் ஈண்டுக் காட்டுவர். யாம் இவ்வோத்தின் புறனடையாற் காட்டுதும். |
இது ழகர ஈற்றிற்கும் ஒக்கும். |
மாட்டேற்றான் உறழ்ச்சியுங் கொள்க. வேர்ங்குறை வேர்க்குறை என வரும். |
(67) |
363. | ஆரும் வெதிருஞ் சாரும் பீரு மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும். |
|
இஃது இவ் வீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. |
இதன் பொருள் : ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் - ஆரென்னுஞ் சொல்லும் வெதிரென்னுஞ் சொல்லுஞ் சாரென்னுஞ் சொல்லும் பீரென்னுஞ் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும் - மெல்லெழுத்து மிக்கு முடிதல் மெய்ம்மைபெறத் தோன்றும் என்றவாறு. |
உதாரணம் : ஆர்ங்கோடு வெதிர்ங்கோடு சார்ங்கோடு பீர்ங்கொடி செதிள் தோல் பூ என வரும். |
1பீர் மரமென்பார் பீர்ங்கோடென்பர். 'பீர்வாய்ப் பிரிந்த நீர்நிறை முறைசெய்து' என்றாற்போலச் சான்றோர் பலருஞ் செய்யுள் செய்தவாறு காண்க. |
மெய்பெற என்றதனான் 'ஆரங் கண்ணி யடுபோர்ச் சோழர்' (அகம் - 93) என ஆர் அம்முப்பெறுதலும் 'மாரிப் |
|
1. பீர், கொடியென்பது இவர் கருத்துப்போலும். மரமென்பாருமுளர் என்றமையின். குதிர் முதலியன மரம். |