'ஒருபொரு ணுதலிய சூத்திரங் தானு மினமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானு மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்.' | | (செய்-168) | ஒருநெறிப்படப் புணர்க்கப்படூ உந்தன்மையுடைமையானென்க. மரபு, இலக்கணம், முறைமை, தன்மை என்பன ஒருபொருட் கிளவி. | ஆயின் நூலென்றது ஈண்டு மூன்றதிகாரத்தினையு மன்றே? இவ்வோத்து மூன்றதிகாரத்திற்கும் இலக்கண மாயவா றென்னையெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்குஞ் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்துமூன்றனைப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகைகோடலின் தொகை வேறாம். அளவு செய்யுளியற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவு முளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்குங் கூறியமாத்திரை இரண்டிடத்திற்கும் ஒத்த அளவு. ஆண்டுக் கூறுஞ் செய்யுட்கு அளவு கோடற்கு ஈண்டைக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது 'அளபிறந் துயிர்த்தலும்' (எழு - 33) என்னுஞ் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியுமாற்றான் உணர்க. இன்னுங் குறிலும் நெடிலும் மூவகையினமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறையும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ்வதிகாரத்திற்கே உரியனவாகக் கூறியன. 'அம்மூவாறும்' (எழு - 22) என்னுஞ் சூத்திர முதலியவனவற்றான் எழுத்துக்கள்கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையிற் சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று. இங்ஙனம் மூன்றதிகாரத்திற்கும் இலக்கணங் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணங் கூறியதாயிற்று. நூலென்றது தொல்காப்பியமென்னும் பிண்டத்தை. இவ் வோத்திலக்கணங் கடாம் எழுத்துக்களது பெயரும் முறையுந்தொகையும் அளவுங் குறைவுங் கூட்டமும் இனமும் மயக்கமுமாம். ஏனைய இவ்வதிகாரத்துள். ஏனையோத்துக்களுள் உணர்த்துப. | அற்றேல் அஃதாக, இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதனுதலிற்று. |
|
|