1பிற்கூறிய இரண்டும் இல்லென்னும் வினைக்குறிப்பு முதனிலையடியாகத் தோன்றிய பெயரெச்ச மறை தொக்கும் விரிந்தும் நின்றன. |
இயல்பு முற் கூறாததனால் இம்முடிபிற்கு 2வேண்டுஞ் செய்கை செய்க. தாவினீட்சி என்றாற்போல வேறுபட வருவனவற்றிற்கும் வேண்டுஞ் செய்கை செய்து முடிக்க. |
(77) |
373. | வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. |
|
இஃது இருவழியுந் திரிந்தும் உறழ்ந்தும் வருமென எய்தியதனை விலக்கித் தொழிற்பெயரோடு மாட்டெறிதலிற் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : வல் என் கிளவி - வல்லென்னுஞ் சொல் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும், தொழிற்பெயர் இயற்று - ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் இய்லபிற்றாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகாரத்தும் உகரமும் பெற்றுமுடியும் என்றவாறு. |
உதாரணம் : வல்லுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். |
(78) |
374. | நாயும் பலகையும் வரூஉங் காலை யாவயி னுகரங் கெடுதலு முரித்தே யுகரங் கெடுவழி யகர நிலையும். |
|
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
|
1. பிற்கூறிய இரண்டும் என்றது, எண்ணில் குணம் என்பதையும் இல்லாக்கொற்றன் என்பதையும். எண்ணில் குணம் என்பது எண்ணில்லாத குணமென விரிதலின் பெயரெச்சமறை தொக்கதென்றார். இல்லாக்கொற்றன் (இல்லாத கொற்றன்) என்பது விரிந்து வந்தது ; தகர அகரம் தொக்கது. |
2 வேண்டும் செய்கை என்பது ஐ வருமிடத்து லகர மிரட்டித்தலும், தாவில்+நீட்சி என்பதில் லகரங் கெடுதலும் நகரந் திரிதலுமாம். லகரம் கெடுதற்கு விதி தொகைமரபு 18-ம் சூத்திரத்து மிகையாற் கொள்க. |