இதன் பொருள் : நாயும் பலகையும் வரூஉங் காலை - வல்லென்பதன்முன் நாயென்னுஞ்சொல்லும் பலகையென்னுஞ் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, ஆவயின் உகரங் கெடுதலும் உரித்து - அவ்விடத்து உகரங் கெடாது நிற்றலேயன்றிக் கெட்டு முடியவும் பெறும், உகரங் கெடுவழி அகரம் நிலையும் - அவ்வுகரங் கெடுமிடத்து அகரம் நிலைபெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் : வல்லநாய் வல்லப்பலகை என வரும். |
உம்மை எதிர்மறையாகலான் உகரங் கெடாதே நின்று வல்லுநாய் வல்லுப்பலகை என வருதலுங் கொள்க. |
அகரம் நிலையுமென்னாது உகரங் கெடுமென்றதனாற் பிற வருமொழிக்கண்ணும் இவ்வகரப்பேறு கொள்க. வல்லக் கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். |
(79) |
375. | பூல்வே லென்றா வாலென் கிளவியொ டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே. |
|
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. |
இதன் பொருள் : பூல் வேல் என்றா ஆலென்கிளவியொடு ஆமுப்பெயர்க்கும் - பூலென்னுஞ் சொல்லும் வேலென்னுஞ் சொல்லும் ஆலென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்றுபெயர்க்கும், அம் இடைவரும் - வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடைவந்து முடியும் என்றவாறு. |
உதாரணம் : பூலங்கோடு வேலங்கோடு ஆலங்கோடு செதிள் தோல் பூ என வரும். |
வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் ஒட்டுக. பூலஞெரி வேலஞெரி ஆலஞெரி நீழல் விறகு என வரும். என்றா என எண்ணிடையிட்டமையாற் 1பூலாங்கோடு பூலாங்கழி என ஆகாரம் பூலுக்குக் கொள்க. |
(80) |
|
1. பூலாங்கோடு ஆகாரமும் மெல்லெழுத்தும் பெற்று வந்தது. |