மழையென்பதனை 'வளியென வரூஉம்' (எழு - 242) என்பதனுடனும் வளியென்பதனைப் 'பனியென வரூஉம்' (எழு - 241) என்பதனுடனும் மாட்டெறிந்தவாறு காண்க. |
உதாரணம் : வெயிலத்துக் கொண்டான் வெயிலிற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். இஃது அத்துமிசை யொற்றுக் கெடாதுநின்ற இடம். இஃது 'அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து' (எழு - 133) மிக்கது. அதிகார வல்லெழுத்தின்மையின் இயல்புகணத்துங் கொள்க. 1சாரியை வருமொழி வரையாது கூறினமையின். |
378. | சுட்டுமுத லாகிய வகர விறுதி முற்படக் கிளந்த வுருபிய னிலையும். |
|
இது முறையானே வகர ஈறு வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : சுட்டுமுதலாகிய வகர இறுதி - வகர ஈற்றுப் பெயர் நான்கனுட் சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுப்பெயர் மூன்றும், முற்படக் கிளந்த உருபியல் நிலையும் - முற்படக்கூறிய உருபு புணர்ச்சியின் இயல்பிற்றாய் வற்றுப்பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் : அவற்றுக்கோடு இவற்றுக்கோடு உவற்றுக்கோடு செவி தலை புறம் என வரும். |
முற்படக்கிளந்த என்றதனானே வற்றினோடு இன்னும் பெறுதல் கொள்க. அவற்றின்கோடு இவற்றின்கோடு உவற்றின்கோடு செவி தலை புறம் என ஒட்டுக. இதனை ஏனைக் கணத்தோடு ஒட்டுக. |
(83) |
379. | வேற்றுமை யல்வழி யாய்த மாகும். |
|
இது மேலனவற்றிக்கு அல்வழிமுடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : வேற்றுமையல்வழி ஆய்தமாகும் - அச்சுட்டுமுதல் வகரம் வன்கணத்துக்கண் வேற்றுமையல்லாத இடத்து ஆய்தமாய்த் திரிந்து முடியும் என்றவாறு. |
|
1. சாரியை இயல்புகணத்துக்கொள்க என மாற்றுக. |