சிறப்புப்பாயிரம்3

விளைதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரை
யிடுதலு மெடுத்தலு மின்னண மாக
வியையக் கூறுப வியல்புணர்ந் தோரே.'
 

 

'பூவின தியல்பே பொருந்தக் கூறின்
மங்கல மாதலு நாற்ற முடைமையுங்
காலத்தின் மலர்தலும் வண்டிற்கு ஞெகிழ்தலும்
கண்டோ ருவத்தலும் விழையப் படுதலு
முவமத் தியல்பி னுணரக் காட்டுப.'

 

'துலாக்கோ லியல்பே தூக்குங் காலை
மிகினுங் குறையினு நில்லா தாகலு
மையந் தீர்த்தலு நடுவு நிலைமையோ
டெய்தக் கூறுப வியல்புணர்ந் தோரே.'
 

 

என நான்குங் கண்டுகொள்க.
 

இனிக் கற்கப்படாதோரும் நான்கு திறத்தார்.
 

'கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.'
 

 

இதனுட்  1கழற்பெய்குடமாவது  கொள்வோனுணர்வு  சிறிதாயினுந் தான்
கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல். 2மடற்பனை யென்பது  பிறராற் கிட்டுதற்கு
அரிதாகி  இனிதாகிய  பயன்களைக் கொண்டிருத்தல். 3முடத்தெங்கென்பது
ஒருவர்  நீர்வார்க்கப்  பிறர்க்குப்  பயன்படுவதுபோல  ஒருவர்  வழிபடப்
பிறர்க்கு  உரைத்தல். 4குண்டிகைப் பருத்தியென்பது  சொரியினும்  வீழாது
சிறிதுசிறிதாக     வாங்கக்    கொடுக்குமதுபோலக்   கொள்வோனுணர்வு
பெரிதாயினுஞ் சிறிது சிறிதாகக் கூறுதல்.
 

இனி,
 

'ஈத லியல்பே யியல்புறக் கிளப்பிற்
பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
 


1. 'பெய்தமுறை   யன்றிப்  பிறழ   வுடன்றருஞ் -  செய்தி  கழற்பெய்
குடத்தின் சீரே.'
 

2. 'தானே  தரக்கொளி  னன்றித்  தன்பான் - மேவிக்  கொளக்கொடா
விடத்தது மடற்பனை.'
 

3. 'பல்வகை  யுதவி  வழிபடு  பண்பி - னல்லோ  ரல்லோர்க் களிக்கு
முடத் தெங்கே.'
 

4. 'அரிதிற்  பெயக்கொண்  டப்பொரு டான்பிறர்க் - கெளிதீ வில்லது
பருத்திக் குண்டிகை.'