வல்லெழுத்தும் மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் : 1தெவ்வுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், தெவ்வுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். |
உரையிற்கோடலென்பதனாற் தெம்முனை என வகரவொற்று மகரவொற்றாகத் திரிதல் கொள்க. |
(87) |
383. | ழகார விறுதி ரகார வியற்றே. |
|
இது நிறுத்தமுறையானே ழகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : ழகார இறுதி ரகார இயற்று - ழகார ஈற்றுப்பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகார ஈற்றின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் : பூழ்க்கால் சிறகு தலை புறம் என வரும். |
(88) |
384. | தாழென் கிளவி கோலொடு புணரி னக்கிடை வருத லுரித்து மாகும். |
|
இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு எய்திய தன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது, வல்லெழுத்தினோடு அக்கு வகுத்தலின். |
இதன் பொருள் : தாழ் என் கிளவி கோலொடு புணரின் - தாழென்னுஞ்சொற் கோலென்னுஞ் சொல்லோடு புணரும் இடத்து, அக்கு இடைவருதலும் உரித்தாகும் - வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை இடையே வந்து நிற்றலும் உரித்து என்றவாறு. |
எனவே, அக்குப்பெறாது வல்லெழுத்து மிகுதல் வலியுடைத்தாயிற்று. |
உதாரணம் : தாழக்கோல் தாழ்க்கோல் என வரும். |
இது தாழைத் திறக்குங் கோல் என விரியும். |
(89) |
|
1. தெவ் - பகை; உரிச்சொல், அஃது ஈண்டுப் பகைவனையுணர்த்திப் பெயராய் நின்றது. |