'எல்லா மெய்யு முருவுரு வாகி' (எழு-17) எனவும், 'உட்பெறு புள்ளி யுருவா கும்மே' (எழு-14) எனவும், 'மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல்' (எழு-15) எனவுஞ் சிறுபான்மை வடிவுங் கூறுவர். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலிற்கட்புலனாகிய வரிவடிவும் உடையவாயின. பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார், உயிர்க்கு வடிவின்மையின். 'எகர வொகரத் தியற்கையு மற்றே' (எழு-16) எனச் சிறுபான்மை உயிர்க்கும் வடிவு கூறினார். (1) |
இனைத்து - இவ்வளவிற்று. வடிவு என்றது ஒலிவடிவை. குறைவு என்றது மாத்திரைக் குறுக்கத்தை. கூட்டம் - உயிரும் மெய்யும் கூடல். பிரிவு - கூடிய உயிரும் மெய்யும் பிரிந்து நிற்றல். ஒன்று பலவாதல் - ஓரெழுத்தாய் நின்றன பிரிந்து பலவாதல். அஃதாவது, 'குன்றேறாமா' என்புழி மாவின் முன் நின்ற 'றா' என்றும் ஓரெழுத்தே 'குன்றேறு ஆமா' எனப் பிரிப்புழி, 'று-ஆ' எனப் பலவாதல். இதனை, இவ்வதிகாரத்து 141-ம் சூத்திரத்தாலறிக. |
திரிந்ததன் றிரிபு அதுவென்றலாவது:- நிலைமொழி வருமொழிகளில் யாங்காயினும் ஓரெழுத்திற்குத் திரிபு கூறி அம்மொழிகளுள் ஒன்றற்கு, மீளவுந் திரிபு கூறுங்கால் அத்திரிபெழுத்து [திரியப்பட்ட எழுத்து] மொழியை யெடுத்துக்கூறாமல் திரியப்பட்டவெழுத்து மொழி அத்திரிந்த எழுத்து மொழியுமாம் என்னும் நயம்பற்றி அத்திரிந்த எழுத்து மொழியையே யெடுத்துப் புணர்ச்சிகூறல். உதாரணம் உருபியலில், 'நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகும் - ஆவயி னகர மொற்றா கும்மே' என்னுஞ் சூத்திரத்தால் 'நீ' 'நின்' எனத் திரியுமெனக் கூறி, மீளவும் அந்த 'நீ' என்பதற்குப் பொருட்புணர்ச்சி விதி கூறுங்கால், முற்கூறிய 'நின்' என்னும் திரிபு மொழியை யெடுத்துக் கூறாமல் 'நின்' எனத் திரிந்ததும் 'நீயே' என்பது பற்றி அதனையேயெடுத்து 'நீயெனொருபெய ருருபிய னிலையும்' எனக் கூறல் காண்க. இன்னும் குற்றியலுகரப் புணரியலில் 'மூன்று மாறும் நெடுமுதல் குறுகும்' என்ற ஆசிரியர், 'மூன்ற னொற்றே பகார மாகும்' எனக் கூறுதலும், 'ஆறென் கிளவி முதனீ டும்மே' எனக் கூறுதலும் அன்னவாதல் உணர்க. இன்னும், புள்ளிமயங்கியலில், லகரவீற்று மொழி |