வழி வருமொழி நகரந் திரிந்துழி நிலைமொழி னகரக்கேடுங் கொள்க. |
அளவு நிறையு மதனோ ரன்ன என்று பாடம் ஓதுவார் முன்னர்ச் சூத்திரத்து 'ஆவயின்' என்றதனானும் அதன் முன்னர்ச் சூத்திரத்து 'நின்ற' என்றதனானும் இவற்றை முடிப்பார். |
(72) |
478. | முதனிலை யெண்ணின்முன் வல்லெழுத்து வரினு ஞநமத் தோன்றினும் யவவந் தியையினு முதனிலை யியற்கை யென்மனார் புலவர். |
|
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட்பெயரைப் புணர்க்கின்றது. |
இதன் பொருள் : முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் - ஒன்றென்னும் எண்ணின்முன் வல்லெழுத்து முதன் மொழி வரினும், ஞநம தோன்றினும் - ஞநமக்களாகிய மெல்லெழுத்து முதன்மொழி வரினும், யவவந்து இயையினும் - யவக்களாகிய இடையெழுத்து முதன்மொழி வரினும், முதனிலை இயற்கை என்மனார் புலவர் - அவ் வொன்று முதல் ஒன்பான்கள் முன்னெய்திய முடிபு நிலைமை எய்தி முடியு மென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
எனவே வழிநிலையெண்ணாகிய இரண்டு முதலாகிய எண்கள் அம் மூன்று கணமும் முதன்மொழியாய் வரின் முதனிலை முடிபாகி விகாரம் எய்தியும் எய்தாது இயல்பாயும் முடியும். |
உதாரணம் : ஒருகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணியாழ் வட்டு எனவும், இருகல் இரண்டுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு எனவும் ஒட்டுக இவ்வெண்களிற் குற்றியலுகரம் மெய்யொடுங் கெட்டு முதலீரெண்ணின் ஒற்று ரகாரமாய் உகரம்வந்தது. இருகல் முதலியவற்றிற்கு இடைநிலை ரகாரங் கெடுக்க. முக்கல் மூன்றுகல் சுனை துடி பறை ஞாண் |