கு - பு: இங்கே கூறிய கருவியுஞ் செய்கையும் எழுத்ததிகாரத்துக்கு மாத்திரமே உரையாசிரியராலும் நச்சினார்க்கினியராலும் உரைக்கப்பட்டமையை அவ்விருவரையும் நோக்கித் தெளிந்து கொள்க. |
எஃகுதல் - பஞ்சினை நொய்தாக்கல், மூன்றுறுப்பு - சூத்திரம், ஓத்து, படலம். ஆண்டு என்றது செய்யுளியலை. வண்ணம் என்றது - செய்யுளுக்குரிய வண்ணங்களை. அவை பாவண்ணம் முதலியன. அதனைப் பொருளதிகாரம் 526-ம் சூத்திரம் முதலியவற்றானுணர்ந்துகொள்க. |
உடம்பொடு புணர்த்தலென்னு மிலக்கணத்தா லிவ்வோசை யுருவாதனிலைபெற்றதென்பது - பழனிமலையிலிருக்குங் குமரன் திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் முதலிய இடங்களிலு மிருப்பானென்றால், பழனிமலையும் அவனுக்கு ஓரிடமாதல் தோன்றுதல்போல, எழுத்துக்களுக்குப் பிறப்பிடங்களும் வன்மை மென்மைகளுஞ் சொல்லி அதன்கண் உருவுடையவென்பதையும் பெறவைத்தமையை. |
2. | அவைதாங் குற்றிய லிகரங் குற்றிய லுகர மாய்தமென்ற முற்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. |
|
இது மேற் சார்ந்துவருமென்ற மூன்றிற்கும் பெயரும் முறையும் உணர்த்துதனுதலிற்று. |
இதன் பொருள்:அவைதாம் - மேற் சார்ந்துவரு மெனப்பட்டவைதாம், குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் - குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தமுமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளிவடிவுமாம்; எழுத்தோரன்ன - அவையும் முற்கூறிய முப்பதெழுத்தோடு ஒருதன்மையாய் வழங்கும் என்றவாறு. |
முற்கூறிய 1இரண்டும் உம்மை தொக்குநின்றன. இகர உகரங் குறுகிநின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறுபடுதலின். இவற்றை இங்ஙனங் குறியிட்டாளுதல் எல்லார்க்கும் |
|
1. இரண்டும் என்றது குற்றியலுகர குற்றியலிகரங்களை. அவை உம்மை தொக்கு நின்றன என்றது குற்றியலுகரமும் குற்றியலிகரமும் என உம்மைபெற்று நிற்கவேண்டியன அவ்வும்மைகள் தொக்குக் குற்றியலுகரம் குற்றியலிகரம் என நின்றன என்றபடி. குற்றியலுகரம் உயிரேற இடங்கொடுத்து நிற்றலும் முற்றியலுகரம் |