ஒப்ப முடிந்தது. சந்தனக்கோல் குறுகினாற் பிரப்பங்கோலாகாது; அதுபோல உயிரது குறுக்கமும் உயிரேயாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார். |
இவற்றுட் குற்றியலுகரம் நேர்பசையும் நிரைபசையுமாகச் சீர்களைப் பலவாக்குமாறு செய்யுளியலுள் உணர்க. |
ஆய்தமென்ற ஓசை தான் அடுப்புக்கூட்டுப்போல மூன்று புள்ளிவடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியுமென்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட் டெழுதுப. இதற்கு வடிவு கூறினார், ஏனையொற்றுக்கள்போல |
|
உயிரேற இடங்கொடாமையும் அவ்விரண்டற்குமுள்ள வேறுபாடென்பது நச்சினார்க்கினியர் கருத்து. இதனால் குற்றியலுகரத்துக்கு முன்னும் முற்றியலுகரத்துக்கு முன்னும் உயிர் முதன்மொழி வருங்கால் அவை அடையும் புணர்ச்சி வேற்றுமை அறியப்படும். ஏனைக் கணம் வருங்காலும் அவை அடையும் புணர்ச்சி வேற்றுமைகளை அறிந்துகொள்க. வரகியாது என்புழி வரகு என்பதன் முன் யகர முதன்மொழி வந்தவிடத்து வரகு என்பதிலுள்ள உகரங் கெட்டு இகரம் விரிந்து குறுகி நின்றதாகலின் அவ்விகரம் குற்றியலிகர மெனப்படுமன்றி முற்றியலிகர மெனப்படாது. அதனால் இயல்பான இகரவீற்றுப் புணர்ச்சிக்கும் குற்றியலிகரப் புணர்ச்சிக்கும் உள்ள வேறுபா டறியப்படும். |
காது என்னுஞ் சொல்லை இதழ் குவித்துச் சொல்லுமிடத்து முற்றியலுகரமாம். அதற்குப் பொருள் கொல் என்பது. அதனை இதழ் குவியாமற் சொல்லுமிடத்துக் குற்றியலுகரமாம். அதற்குப் பொருள் காது என்னும் உறுப்பு. முருக்கு என்னுஞ் சொல் இதழ் குவித்துச் சொல்லுமிடத்து அழி எனவும் இதழ்குவியாமற் சொல்லுமிடத்து முருக்காகியமரமெனவும் பொருள்தரும். பிறவும் இவ்வாறே பொருள் வேற்றுமை உடையவாதல் அறிந்துகொள்க. குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்துக்குமுள்ள பொருள் வேற்றுமை இவையே. அரசியாது என்புழி அரசி என்பதிலுள்ள இகரத்தை முற்றியலிகர மாகக் கொள்ளின் அதனை ஓர் இகரவீற்று உயர்திணைப் பெயராகக் கொள்ளவேண்டும். அங்ஙனங் கொள்ளுங்கால் அது யாது என்பதனோடு இயையாது. ஆதலின் அரசு என்பதே சொல்லும் பொருளும் என்பதும் அதிலுள்ள இரகங் குற்றியலிகர மென்பதும் பெறப்படும். படவே அரசி என்பதிலுள்ள இகரத்தை இயல்பாகக் கொள்ளுங்கால் இது பொருளாகுமெனவும் குற்றியலிகரமாகக் கொள்ளுங்கால் இது பொருளாகுமெனவும் அவ்விரண்டற்குமுள்ள பொருள் வேற்றுமை யறியப்பட்டவாறு காண்க. இன்னும் "சங்கந் தருமுத்தி யாம்பெற" |