4சிறப்புப்பாயிரம்

பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
புகழ்ந்த மதியிற் பொருந்து மோரையிற்
றிகழ்ந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக்
கொள்வோ னுணர்வகை யறிந்தவன் கொள்வரக்
கொடுத்தன் மரபெனக் கூறினர் புலவர்.'
 

 

இதனான் அறிக.
 

இனிக்  கொள்வோருங் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோருமென
இருவகையர். அவருட் கற்பிக்கப்படுவோர் அறுவகையர்.
 

அவர்தாம்,
 

'தன்மக னாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
யுரைகோ ளாளனோ டிவரென மொழிப.' 

 

இவர் தன்மை,
 

1'அன்னங் கிளியே நன்னிற நெய்யரி
யானை யானே றென்றிவை போலக்
கூறிக் கொள்ப குணமாண் டோரே.' 

 

இதனான் அறிக.
 

இனிக் கற்பிக்கப்படாதோர் எண்வகையர்.
 

'மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வ
னடுநோய்ப் பிணியாள னாறாச் சினத்தன்
றடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர்
நெடுநூலைக் கற்கலா தார்.' 

 

என இவர். 


1. 'பாலுநீரும்  பாற்படப்  பிரித்த  -  லன்னத்  தியல்பென வறிந்தனர்
கொளலே.'
 

'கிளந்தவா கிளத்தல் கிளியின தியல்பே.'
 

'எந்நிறந்  தோய்தற்கு  மேற்ப  தாத - னன்னிறத்  தியல்பென நாடினர்
கொளலே.'
 

'நல்லவை  யகத்திட்டு   நவைபுறத்  திடுவது  - நெய்யரி  மாண்பென
நினைதல் வேண்டும்.'
 

'குழுவுபடூஉப் புறந்தருதல் குஞ்சரத் தியல்பே.'
 

'பிறந்த  வொலியின்  பெற்றியோர்ந்  துணர்தல் - சிறந்த  வானேற்றின்
செய்தி யென்ப.'