இதுதான் 1இயற்கை யளபெடையுஞ் செய்யுட்குப் புலவர் செய்துகொண்ட 2செயற்கை யளபெடையுமாய்ச் சொற்றன்மை எய்திநின்று அலகு பெறுமாறுங் குற்றியலிகரக் குற்றியலுகரங்கள்போல எழுத்தாந்தன்மை எய்தி அலகு பெறாது நிற்குமாறும் அச்சூத்திரத்தான் உணர்க. எனவே, எழுத்தாந் தன்மையும் உடைமையின் அளபெடையோடு கூடி எழுத்து நாற்பது என்றலும் பொருந்திற்று. ஒற்றளபெடை செய்யுட்கே வருதலின் ஈண்டுக் கூறாராயினார். |
அவ்வளபுடைய எனப் பன்மையாகக் கூறியவதனான் இவரும் நான்கு மாத்திரையுங் கொண்டார்; என்னை? இவ்வாசிரியரை 'முந்துநூல் கண்டு' என்றாராகலின். மாபுராணத்து, |
'செய்யுட்க ளோசை சிதையுங்கா லீரளபு மையப்பா டின்றி யணையுமா மைதீரொற் றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு குன்றுமே லொற்றளபுங் கொள்.' |
|
என்ற சூத்திரத்தான் அவர்கொண்ட நான்கு மாத்திரையும் இவ்வாசிரியர்க்கு நேர்தல்வேண்டுதலின். அது 'செறாஅஅய் |
|
பெற்று நேர் என நிற்பத் தான் அலகுபெறாது) அளபெடையெழுத்தென்று கொள்ளப்பட்டு நிற்றல். எனவே அது அளபெடை எழுத்தென்று நீக்கப்படுவதன்றி அசைக்குரிய எழுத்தாக வைத்து எண்ணப்படாது என்பது கருத்து. அளபெடை யசைநிலையாகலாவது - அளபெடை யெழுத்து, தானுமோரசையாகிச் சீர்நிலை யடையாது, தமக்கு முன்னுள்ள நெட்டெழுத்தோடு சேர்ந்து ஓரசையாகவே கொள்ளப்பட்டு நிற்றல். |
1. இயற்கை யளபெடை குரீஇ, தோழீஇ என்பன போல்வன. இவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாகலின் இயற்கையெனப்பட்டன. தோழீஇ என்பதைத் தொழீஇ என்றுகொள்வாருமுளர். [கலி - 103 - ம் செய்யுட் குறிப்புப் பார்க்க.] |
2. செயற்கை யளபெடை புலவன் செய்யுளோசை நிறைத்தற் பொருட்டுத் தானே செய்துகொண்ட அளபெடை. அது ஓஒதல் வேண்டும் என்பது போல்வன. சொற்றன்மை யெய்தி நிற்றலும் எழுத்தாந் தன்மை யெய்தி நிற்றலும் முன் விளக்கப்பட்டன. அலகு பெறுதல் அசைக்குரிய எழுத்தாக எண்ணப்பெறுதல். இயற்கை யளபெடை செயற்கை யளபெடைகளின் இயல்பைச் செய்யுளியல் 17-ம் சூத்திரம் நோக்கி உணர்க. |