நூன்மரபு45

வாழிய   நெஞ்சு'   (குறள் - 1200)  'தூஉஉத்  தீம்புகைத்தொல்  விசும்பு',
'பேஎஎர்த்துக்கொல்',   'இலாஅ   அர்க்கில்லை   தமர்'   'விராஅஅய்ச்
செய்யாமை   நன்று',   'மரீஇஇப்பின்னைப்   பிரிவு'   எனச்  சான்றோர்
செய்யுட்கெல்லாம்   நான்கு   மாத்திரை  பெற்று நின்றன. அன்றி மூன்று
மாத்திரை   பெற்றனவேல்   ஆசிரியத்தளை    தட்டுச்   1செப்பலோசை
கெடுமாயிற்று.  இங்ஙனம் அளபெடாதுநின்று ஆசிரியத்தளை தட்டு நிற்பன
கலிக்கு   உறுப்பாகிய   கொச்சக  வெண்பாக்கள்; இவை அன்னவன்றென
உணர்க.
 

2கோட்டுநூறும்  மஞ்சளுங்   கூடியவழிப்பிறந்த   செவ்வண்ணம்போல,
நெடிலுங்    குறிலுங்    கூடிய     கூட்டத்துப்     பிறந்த    பின்னர்ப்
பிளவுபடாவோசையை  அளபெடையென்று ஆசிரியர் வேண்டினார். இவை
கூட்டிச்   சொல்லியகாலத்தல்லது   புலப்படா;  எள்ளாட்டிய  வழியல்லது
எண்ணெய் புலப்படாவாறு போல என்று உணர்க. இனி அளபெடையல்லாத
ஓசைகளெல்லாம்      3இசையோசையாதலின்    அவற்றை    'அளபிறந்
துயிர்த்தலும்' (எழு - 33) என்னுஞ் சூத்திரத்தாற் கூறுப.(6)
 

எ.

கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை
நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே.
 

இது மாத்திரைக்கு அளவு கூறுகின்றது.
 

இதன் பொருள்: கண்ணிமை   நொடி   என   அவ்வே மாத்திரை -
கண்ணிமையெனவும் நொடியெனவும் அவ்விரண்டே


1. செப்பலோசை - வெண்பாவுக்குரிய  ஓசை.  அளபெடைக்கு  நான்கு
மாத்திரையுங் கொள்ளாக்கால் ஆன்றோரியற்றிய வெண்பாக்களில்  நான்கு
மாத்திரை   பெறுவன   ஆசிரியத்தளை   தட்டுச்  செப்பலோசை கெடும்.
ஆதலால்   நான்கு   மாத்திரையுங்   கொள்ள   வேண்டு   மென்பதாம்.
கலிக்குறுப்பாகிய கொச்சக வெண்பாக்கள் ஆசிரியத்தளை தட்டும் நிற்கலாம்.
"செறாஅஅய் வாழிய நெஞ்சு" முதலியன அவ்வாறு நிற்றல் கூடா என்க.
 

2. கோட்டுநூறு - சங்குநூறு - சுண்ணாம்பு.
 

3. இசை ஓசை என்றது பாட்டின் இசையை நிறைக்கும் ஓசையை என்பது
ஈண்டு  நச்சினார்க்கினியர்  கருத்து.  ஏனெனில்  "அளபிறந் துயிர்த்தலும்"
என்னுஞ் சூத்திரித்தாற் கூறுப என்று கூறலின்.