சிறப்புப்பாயிரம்5

இவர் தன்மை,
 

1'குரங்கெறி விளங்கா யெருமை யாடே
தோணி யென்றாங் கிவையென மொழிப.'
 

 

இதனான் அறிக.
 

இவருட் களங்கடியப்பட்டார் :
 

'மொழிவ துணராதார் முன்னிருந்து காய்வார்
படிறு பலவுரைப்பார் பல்கா னகுவார்
திரிதரு நெஞ்சத்தார் தீயவை யோர்ப்பார்
கடியப்பட் டாரவையின் கண்.'

 

இனிக் கோடன்மரபு:
 

'கோடன் மரபு கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்
முன்னும் பின்னு மிரவினும் பகலினு
மகலா னாகி யன்பொடு கெழீஇக்
குணத்தொடு பழகிக் குறிப்பின் வழிநின்
றாசற வுணர்ந்தோன் வாவென வந்தாங்
கிருவென விருந்தே டவிழென வவிழ்த்துச்
சொல்லெனச் சொல்லிச் செல்லெனச் சென்று
பருகுவ னன்ன வார்வத்த னாகிச்
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை வல்ல னாகிப்
போற்றிக் கோட லதனது பண்பே.'

 

'எத்திற மாசா னுவக்கு மத்திற
மறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே.' 

 

'செவ்வன் றெரிகிற்பான் மெய்ந்நோக்கிக் காண்கிற்பான்
பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதுங் காதலான்
றெய்வத்தைப் போல மதிப்பான் றிரிபில்லா
னிவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே
செவ்விதி னூலைத் தெரிந்து.'
 


1. 'கல்லா    லெறிந்து    கருதுபயன்   கொள்வோன்  -  குரங்கெறி
விளங்காயாமெனக் கூறுப.'
 

'விலங்கி   வீழ்ந்து   வெண்ணீ   ருழக்கிக்  - கலங்கல்செய் தருந்தல்
காராமேற்றே.'
 

'ஒன்றிடை  யார  வுறினுங்  குளகு - சென்றுசென்  றருந்தல் யாட்டின்
சீரே.'
 

'நீரிடை யன்றி நிலத்திடை யோடாச் - சீருடை யதுவே தோணியென்ப.'