50நூன்மரபு

அவ்வரைமாத்திரையுந்  தனித்துக்  கூறிக்  காட்டலாகாது,  நாச்  சிறிது
புடைபெயருந்   தன்மையாய்  நிற்றலின்.  இனி அதனைச் சில மொழிமேற்
பெய்து   காக்கை   கோங்கு  கவ்வையெனக்   காட்டுப.  1மெய்யென்பது
அஃறிணை    யியற்    பெயராதலின்   மெய்யென்னும்    ஒற்றுமைபற்றி
அரையென்றார்.
 

(11)
 

12.

அவ்விய னிலையு மேனை மூன்றே.
 

இது சார்பிற் றோற்றத்து மூன்றற்கும் அளவு கூறுகின்றது.
 

இதன் பொருள் : ஏனை  மூன்று  -  சார்பிற்  றோற்றத்து  மூன்றும்,
அவ்வியல் நிலையும் -முற்கூறிய அரை மாத்திரையாகிய இயல்பின்கண்ணே
நிற்கும் என்றவாறு.
 

கேண்மியா, நாகு, எஃகு என வரும்.
 

(12)
 

13.

அரையளவு குறுகன் மகர முடைத்தே
யிசையிட னருகுந் தெரியுங் காலை. 
 

இது மெய்களுள் ஒன்றற்கு எய்தியது விலக்குதல் நுதலிற்று.
 

இதன் பொருள் :இசை  இடன் மகரம்  அரையளவு குறுகலுடைத்து -
வேறோர்     எழுத்தினது     ஓசையின்கண்     மகரவொற்றுத்    தன்
அரைமாத்திரையிற்    குறுகிக்    கால்மாத்திரை     பெறுதலையுடைத்து,
தெரியுங்காலை  அருகும் - ஆராயுங்  காலத்துத்  தான் சிறுபான்மையாய்
வரும் என்றவாறு.
 

உதாரணம் : போன்ம் வரும்வண்ணக்கன் என ஒரு மொழிக்கண்ணும்
இருமொழிக்கண்ணுங் கொள்க. 2இது பிறன்கோட் கூறலென்னும் உத்தி.
 

(13)

1. மெய்கள்   எனக்   கூறவேண்டியதை   மெய்யென   ஒருமையாகக்
கூறினமையின்  அதற்கியைய  அரையென  ஒருமையாற்  கூறினாரென்பார்
மெய்யென்னும் ஒற்றுமைபற்றி அரையென்றார் என்றார்.
 

2. சார்பெழுத்து   மூன்றென்பவர்க்    கிது    கூறல்வேண்டாவாகலின்
பிறன்கோட் கூறல் என்னும் உத்தி என்றார்.