நின்று பின்னர் ஏறிய அகரத்தோடு கூடி ஒலித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்த உயிர்த்தலும் - ஒழிந்த பதினோருயிருங் கூடி அவ்வடிவு திரிந்து ஒலித்தலும், ஆயீ ரியல உயிர்த்த லாறே - என அவ்விரண்டு இயல்பினையுடைய அவை ஒலிக்கும் முறைமை என்றவாறு. |
புள்ளியில்லா மெய்யெனவே முன் பெற்று நின்ற புள்ளியை உயிரேற்றுதற்குப் போக்கினமை பெறுதும். உருவுருவாகி யெனவே புள்ளி பெறுவதற்காக இயல்பாகிய அகரம் நீங்கிய வடிவே பின்னர் அகரம் பெறுவதற்கு வடிவாமென்பது கூறினார். |
க-ங-ய என வரும். |
உருவு திரிந்து உயிர்த்தலாவது மேலும் கீழும் விலங்கு பெற்றும் கோடுபெற்றும் 1புள்ளிபெற்றும் புள்ளியுங் கோடும் உடன்பெற்றும் உயிர்த்தலாம். கி கீ முதலியன மேல்விலங்கு பெற்றன. கு கூ முதலியன கீழ்விலங்கு பெற்றன. கெ கே முதலியன கோடு பெற்றன. கா ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார். கொ கோ ஙொ ஙோ முதலியன புள்ளியுங் கோடும் உடன்பெற்றன. இங்ஙனந் திரிந்து ஒலிப்பவே உயிர்மெய் பன்னிரு பதினெட்டு இருநூற்றொருபத்தாறாயிற்று. ஆகவே உயிர்மெய்க்கு வடிவும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று. இதனானே மெய் தனக்கு இயல்பாகிய அகரத்தை நீங்கி நிற்பதோர் தன்மையும் பிறிதோருயிரை ஏற்குந் தன்மையும் உடையதென்பதூஉம், உயிர் மெய்க்கட் புலப்படாது இயல்பாகிய அகரமாய் நிற்குந் தன்மையும், மெய் புள்ளிபெற் றழிந்தவழி அவற்றிற்குத் தக்க உயிராய்ப் புலப்பட்டுவருந் தன்மையும் உடையதென்பதூஉம் பெற்றாம். உயிர்மெய் யென்பது உம்மைத் தொகை. |
(17) |
|
1. புள்ளிபெறுதல் என்றது ; கா ஙா என்பன அக்காலத்து க. ங. எனப் புள்ளிபெற்று வழங்கினமையை. உயிர் தன்மையும், தன்மையுமுடைய தென்பது பெற்றாம் என முடிக்க. புலப்படாது நிற்றல் இயல்பாகிய அகரமும், புலப்பட்டுநிற்றல் ஏறிய உயிரும் என்க. உயிர் நிற்குந் தன்மையும், உயிர் வருந் தன்மையு முடையது எனக் கூட்டிக்கொள்க. |