54நூன்மரபு

18.

மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே.
 

இது  மெய்யும்  உயிருங் கூடியவழி அவற்றின் ஓசை நிற்கும் முறைமை
கூறுகின்றது.
 

இதன் பொருள்; மெய்யின் 1வழியது - மெய்யினது  ஓசை  தோன்றிய
பின்னதாம், உயிர் தோன்று நிலையே - உயிரினது ஓசை தோன்றும் நிலை
என்றவாறு.
 

முன்னின்ற  சூத்திரத்தான்  மெய்  முன்னர்  நிற்ப  உயிர்பின்  வந்து
ஏறுமென்றார்.   அம்முறையே   ஓசையும்   பிறக்கு மென்றார். இதனானே
மாத்திரை  கொள்ளுங்கால்  உப்பும்  நீரும்  போல ஒன்றேயாய் நிற்றலும்
வேறுபடுத்துக்  காணுங்கால் விரலும் விரலுஞ் சேரநின்றாற்போல  வேறாய்
நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமேயாயவாறுபோல உயிரும் மெய்யின்
குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க.
 

உதாரணம்; க-ங-ய  எனக்  கூட்டமும்  பிரிவும் மூவகை யோசையுங்
காண்க.
 

(18)
 

19.

வல்லெழுத் தென்ப க ச ட த ப ற.
 

இது தனிமெங்களுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது.
 

இதன் பொருள்; க ச ட த ப ற   -   க ச ட த ப ற    என்னுந்
தனிமெய்களை,     வல்லெழுத்தென்ப    -    வல்லெழுத்    தென்னும்
2குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
 

இஃது ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. ஒழிந்த மெல்லெழுத்தையும்
இடையெழுத்தையும்  நோக்கித் தாம்  வல்லென்றிசைத்தலானும் வல்லெனத்
தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தாயிற்று.
 

(19)
 

20.

மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன.
 

இதுவும் அது.
 

இதன் பொருள்; ங ஞ ண ந ம ன  -  ங ஞ ண ந ம ன   என்னுந்
தனிமெய்களை, மெல்லெழுத்தென்ப - மெல்லெழுத்


1, வழி - பின்.
 

2. குறி - பெயர்.