தென்னங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி.மெல்லென்றிசைத்தலானும் மெல்லென்று மூக்கின் வளியாற் பிறத்தலானும் மெல்லெழுத்தாயிற்று. |
21. | இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள. |
|
இதுவும் அது. |
இதன் பொருள்; ய ர ல வ ழ ள - ய ர ல வ ழ ள என்னுந் தனி மெய்களை, இடையெழுத்தென்ப -இடையெழுத் தென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. இடை நிகர்த்தாய் ஒலித்தலானும் இடைநிகர்த்தாய மிடற்றுவளியாற் பிறத்தலானும் இடையெழுத்தாயிற்று. |
வல்லினத்துக் க-ச-த-ப என்னும் நான்கும் மெல்லினத்து ஞ-ந-ம என்னும் மூன்றும் இடையினத்து ய-வ என்னும் இரண்டும் மொழிக்கு முதலாதல் மொழிக்கு முதலாதல் நோக்கி இம்முறையே வைத்தார். 1இப்பெயரானே எழுத்தென்னும் ஓசைகள் உருவாயின. உயிர்க்குங் குறுமை நெடுமை கூறலின் அவையும் உருவாயின. இது சார்பிற் றோற்றத்திற்கும் ஒக்கும். |
(21) |
22. | 2அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் மெய்ம்மயங் குடனிலை தெரியுங் காலை. |
|
இது தனிமெய் பிறமெய்யோடுந் தன்மெய்யோடும் மயங்கும் மயக்கமும் உயிர்மெய் உயிர்மெய்யோடுந் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கமும் கூறுகின்றது. |
|
1. இப்பெயரானே என்றது, வன்மை மென்மை இடைமை என்னும் பெயர்களை. உரைகாரர் தாம் எழுத்து அருவன்று உருவென்பதை இதனாலும் வலியுறுத்துமாறு உருவாயின என ஈண்டுங் கூறினாரென்க. |
2. இச் சூத்திரத்துக்கு உரையாசிரியர் மேற்சொல்லிய பதினெட்டு மெய்யும் தம்மை மொழிப்படுத்தி வழங்குதலுளதாமிடத்து |