ப றக்கள், ஒத்தன நிலையே - பின்னிற்றற்குப் பொருந்தின மயங்கி நிற்றற்கண் என்றவாறு. |
உதாரணம் : கங்கன் கஞ்சன் கண்டன் கந்தன் கம்பன் மன்றன் என வரும். தெங்கு பிஞ்சு வண்டு பந்து கம்பு கன்று எனக் குற்றுகரமுங் காட்டுப. |
(25) |
26. | அவற்றுள், ணனஃகான் முன்னர்க் க ச ஞ ப ம ய வவ் வேழு முரிய. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : அவற்றுள் - மேற்கூறிய மெல்லொற்று ஆறனுள், ணனஃகான் முன்னர் - ணகார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய - டறக்களே யன்றிக் க ச ஞ ப ம ய வ என்னும் ஏழெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய என்றவாறு. |
உதாரணம் : 1எண்கு வெண்சாந்து வெண்ஞாண் பண்பு வெண்மை மண்யாறு எண்வட்டு எனவும், புன்கு புன்செய் மென்ஞாண் அன்பு வன்மை இன்யாழ் புன்வரகு எனவும் வரும். எண்வட்டு வினைத்தொகை. எண்கு புன்கு பெயர். |
(26) |
27. | ஞ ந ம வ வென்னும் புள்ளி முன்னர் யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் - ஞ ந ம வ என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய்பெற்றன்றே - யஃகான் நிற்றல் பொருண்மை பெற்றது என்றவாறு. |
இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ்செய்தலின் அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன. |
|
1. எண்கு - கரடி. ஞாண் - கயிறு. எண்வட்டு என்பதற்கு எண்ணப்படும் வட்டு எனப் பொருள் கொள்க. |