6சிறப்புப்பாயிரம்

'வழக்கி னிலக்கண மிழுக்கின் றறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்த
லாசாற் சார்ந்தவை யமைவரக் கேட்ட
லம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தலென் றின்னவை
கடனாக் கொளினே மடநனி யிகக்கும்.'

 

'அனைய னல்லோன் கேட்குவ னாயின்
வினையி னுழப்பொடு பயன்றலைப் படாஅன்.'

 

'அனைய னல்லோ னம்மர பில்லோன்
கேட்குவ னாயிற் கொள்வோ னல்லன்.'

 

இவற்றான் உணர்க.
 

இம்மாணாக்கன் முற்ற உணர்ந்தானாமாறு,
 

'ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே.'

 

'முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.'

 

'ஆசா னுரைத்த தமைவரக் கொளினுங்
காற்கூ றல்லது பற்றல னாகும்.'

 

'அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபாற்
செவ்விதி னுரைப்ப வவ்விரு பாலு
மையறு புலமை மாண்புநனி யுடைத்தே.' 

 

'பிறர்க்குரை யிடத்தே நூற்கலப் பாகுந்
திறப்பட வுணருந் தெளிவி னோர்க்கே.'

 

இவற்றான் அறிக.
 

பொதுப்பாயிரம் முற்றிற்று.
 

இனிச்   சிறப்புப்பாயிரமாவது    தன்னால்   உரைக்கப்படும்   நூற்கு
இன்றியமையாதது. அது பதினொருவகையாம்.
 

'ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.' 

 

'காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே.' 

 

இப்பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே பெறப்பட்டன.