32. | ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. |
|
இது நெட்டெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா - ஆ ஏ ஓ என்று கூறப்பட்ட அம் மூன்றும் வினா என்னுங் குறியினையுடைய என்றவாறு. |
இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கிய குறி, வினாப் பொருள் உணர்த்தலின். |
உதாரணம் : 1உண்கா உண்கே உண்கோ என வரும். இவற்றுள் 2ஆகாரம் இக்காலத்து வினாவாய் வருதலரிது. நீயே நீயோ என்பது இக்காலத்து வரும். இவற்றுள் ஏ ஓ என்பன இடைச்சொல்லோத்தினுள்ளுங் கூறினார், ஏகார ஓகாரங்கள் தரும் பொருட்டொகைபற்றி, 3இது மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தலென்னும் உத்திக்கு இனமாம், யகர ஆகாரமும் வினாவாய் வருதலின். |
(32) |
33. | அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலு முளவென மொழிப விசையொடு சிவணிய நரம்பின் மறைய வென்மனார் புலவர். |
|
இது பிறன்கோட்கூறலென்னும் உத்திபற்றி இசை நூற்கு வருவதோர் இலக்கணமாமாறு கூறி, அவ் விலக்கணம் இந்நூற்குங் கொள்கின்றது. |
|
1. உண்கா - உண்பேனா ? |
2. ஆகாரமும் ஏகாரமும் எனவும் பாடம்; அது பொருத்தமின்று மகாலிங்கையர் பதிப்பு நோக்குக. |
3. மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாததனையு முட்டின்று முடித்தலென்னு முத்தியாவது - எடுத்தோதிய பொருண்மைக் கேற்றவகையா னப்பொருண்மைக்குச் சொல்லாத தொன்று கொள்ள வைத்தல். இங்கே எடுத்தோதிய பொருள் வினா ஆ ஏ ஓ அம் மூன்றும் என்பது. அவற்றோடெடுத்தோதாத பொருள் யா என்பது. அதனையும் வினாவென்று இவ்வுத்தியாற் கொள்க என்றபடி இனமென்றது உயிர்மெய்யாதலிற் போலும். |