மொழிமரபு69

37.

இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய லான.
 

இது   குற்றியலுகரம்   புணர்மொழிக்கண்   தன்   அரைமாத்திரையிற்
குறுகிவரு மென்கின்றது.
 

இதன் பொருள் : இடைப்படிற்   குறுகும்   இடனுமார்   உண்டே -
அவ்வுகரம்     ஒருமொழியுளன்றிப்    புணர்மொழியிடைப்படின்    தன்
அரைமாத்திரையினுங்   குறுகும்   இடனும்   உண்டு,  கடப்பாடு அறிந்த
புணரியலான - அதற்கு  இடனும் பற்றுக்கோடும் யாண்டுப் பெறுவதெனின்,
அதன் புணர்ச்சி முறைமை அறியுங் குற்றியலுகரப் புணரியலுள் என்றவாறு.
 

'வல்லொற்றுத் தொடர்மொழி' (எழு - 409) என்பதனுள் வல்லெழுத்துத்
தொடர்மொழியும்    வல்லெழுத்து    வரும்    வழியும்  இடம் ;  ஈற்று
வல்லெழுத்துப் பற்றுக்கோடு.
 

உதாரணம் : செக்குக்கணை    சுக்குக்கோடு    எனவரும்.    இவை
அரைமாத்திரையிற்   குறுகியவாறு   ஏனையவற்றோடு   படுத்து  உணர்க.
இடனுமெனவே இது சிறுபான்மையாயிற்று.
 

(4)
 

38.

குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
யுயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.
 

இது நிறுத்தமுறையானே ஆய்தம் ஒருமொழியுள் வருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : ஆய்தப்புள்ளி  -  ஆய்தமாகிய  ஒற்று,  குறியதன்
முன்னர்  உயிரொடு  புணர்ந்த  வல்லாறன்  மிசைத்து  -  குற்றெழுத்தின்
முன்னதாய்  உயிரோடுகூடிய   வல்லெழுத்தாறின்  மேலிடத்ததாய்  வரும்
என்றவாறு.
 

1வல்லா  றன்மிசைத்  தென்றதனானும்  ஈண்டுப்  புள்ளியென்றதனானும்
'ஆய்தத்  தொடர்மொழி' (எழு - 406) என மேற்கூறுதலானும் உயிரென்றது
ஈண்டுப் பெரும்பான்மை


1. வல்லாறன்மிசைத்  தென்றதனானும்  ஈண்டுப்  புள்ளி என்றதனானும்,
ஆய்தத்  தொடர்மொழியென  மேற்கூறுதலானும்,  உயிர் என்றது ஈண்டுப்
பெரும்பான்மையும்  குற்றுகரமேயா  மென்றதன்  விளக்கமாவது :-   முன்
குற்றயலுகர விலக்கணங் கூறுமிடத்து உக